இயக்குனர் ஷங்கர் ஆரம்ப காலத்தில், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். அது பல பேருக்கு தெரியாது. சில படங்களில் சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் ஜெண்டில் மேன் படத்துக்கு பிறகுதான் ஷங்கர் பற்றிய அறிமுகமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்தது. அதன்பிறகு காதலன், முதல்வன், ஜீன்ஸ், பாய்ஸ், இந்தியன் உள்ளிட்ட படங்களை தந்து பிரமாண்ட இயக்குனராக மாறினார்.
முன்பெல்லாம் மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், கே பாலசந்தர் படங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்ன பிறமொழிகளை சேர்ந்த நடிகர் நடிகையர் பலரும் இப்போது டைரக்டர் ஷங்கர், டைரக்டர் வெற்றிமாறன், டைரக்டர் பாலா, டைரக்டர் அமீர் படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்திய சினிமா இயக்குனர்களில் ஒருவராக ஷங்கர் இருக்கிறார்.
ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான். அவரது படங்கள் என்றாலே படத்தின் கதை தான் பேசும். அதைவிட தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி இருப்பார். அந்நியன், ஐ. ரோபோ, 2.ஓ, சிவாஜி, நண்பன் என எல்லா படங்களிலும் ஹீரோயிசத்தை தாண்டி இயக்குனர் ஷங்கர் இருப்பார். அதுதான் அவரது படைப்பாற்றலின் வெற்றியாக இருந்திருக்கிறது.
இப்போது ஷங்கர் இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படம் இயக்கிய நிலையில், அந்த கதையே இந்தியன் 3 படத்தை உருவாக்கிய நிலையில், இந்தியன் படத்தை 2, 3 என இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார். இதுதவிர கேம் சேஞ்சர் என்ற படத்தை, தெலுங்கு பட ஹீரோ ராம்சரணை வைத்து இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நடிகராக எஸ்ஜே சூர்யா மாறியிருக்கிறார். குறிப்பாக மாநாடு படத்துக்கு பிறகு, மார்க் ஆண்டனி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்திருக்கிறது. அதனால் பல இயக்குனர்கள் படங்களில் எஸ்ஜே சூர்யாவுக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்து, பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய இரண்டு பாகங்களிலும் எஸ்ஜே சூர்யாதான் வில்லன். அதே போல், ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்திலும், வில்லனாக நடிக்குமாறு இயக்குனர் ஷங்கர், எஸ்ஜே சூர்யாவிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எஸ்ஜே சூர்யாவுக்கான வில்லன் கேரக்டரை உடனடியாக உருவாக்கிய ஷங்கர் 8 நாட்கள் கால்ஷீட்டில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை படம்பிடிக்க உள்ளார். இந்த நடிப்பு அரக்கன் ஏற்கனவே, மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து, ஆந்திரா ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





