நடிகர் கவுண்டமணியை 16 வயதினிலே படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் ரஜினியுடன் நடிக்க வைத்தவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த கே பாக்யராஜ் தான். அதன்பிறகு அவர் இயக்கிய சுவர் இல்லாத சித்திரங்கள் படத்திலும் டெய்லர் காளியண்ணன் கேரக்டரில் கவுண்டமணி நடித்து அசத்தியிருந்தார். அதன்பிறகு அவரது காமெடி பெரிய அளவில் பிக்கப் ஆகி விட்டது.
மற்ற காமெடி நடிகர்களை போல ஹீரோக்களுடன் சும்மா வந்து செல்பவராக இருக்க மாட்டார் கவுண்டமணி. சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கமல் போன்ற பெரிய நட்சத்திர நடிகர்களையே அவர் சர்வ சாதாரணமாக கவுண்டமணி கலாய்த்து விடுவார். ஆனால் ரஜினி கமல் போன்றவர்கள் கூட கவுண்டமணியை பார்த்து அப்படி கிண்டலடிக்க மாதிரி டயலாக் பேசாதீங்க என்று சொல்ல முடியாத அளவுக்கு கவுண்டமணி காமெடி கிங் ஆக இருந்தவர்.
சில படங்களில் ஹீரோ யாராக இருந்தாலும் கவுண்டமணி செந்தில் காமெடி இருந்தால் அந்த படம் ஹிட் ஆகி விடும். அப்படி பெரும்பாலான தமிழ் படங்கள் ஜெயித்திருக்கின்றன. குறிப்பாக ராமராஜனின் கிராமத்து படங்களில் எல்லாம் கவுண்டமணி செந்தில் காமெடி கண்டிப்பாக இருக்கும். அதில் இளையராஜா இசை என்றாலே அந்த படம் வெள்ளி விழா படம்தான் என்று ரிலீஸ்க்கு முன்பே எழுதி தந்து விடலாம்.
அப்படி 1990களில் வெளியான படங்களில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் 2 வேடங்களில் நடித்த படம்தான் நாட்டாமை. இதில் குஷ்பு மீனா நாயகியாக நடித்திருந்தனர். இதில் அப்பா மகன் கேரக்டரில் செந்தில் அப்பாவாகவும் கவுண்டமணி மகனாகவும் நடித்திருந்தனர். இதில் ஒரு காட்சியில் மட்டும் கவுண்டமணியின் அம்மாவாக கவுண்டமணியே பெண் வேடத்தில் வந்து அசத்தியிருப்பார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நாட்டாமை படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நடிகர் கவுண்டமணியிடம் நாட்டாமை படத்துக்கு 3 நாள் கால்ஷீட்டு கேட்டிருந்தேன். கவுண்டமணி என்கிட்ட கதை கேட்காமல் தான் எப்பவும் நடிப்பார். ஏய் ரவி நீ பின்னிடுவேன்னு சொல்லுவார். நாட்டாமை படத்துக்கு 3 நாள் கால்ஷீட் வாங்கிட்டேன். ஆனால் படம் முழுவதும் கவுண்டமணி வருவார்.
அப்போது கவுண்டமணி, 3 நாளுன்னு சொல்லிட்டு டபுள் ஆக்சன் வேற எடுக்கிறே? என்ன நெனச்சிட்டு இருக்குறே நீ? இனிமே உன்னோட படத்துக்கு நாள் சம்பளம் கிடையாது. படத்துக்கு வாங்குற சம்பளம் தான் அப்படீன்னு சொன்னார். நீங்க படம் பார்த்தால் தெரியும், கவுண்டமணி காமெடி சீன் தவிர்த்து எல்லா முக்கியமான சீன்லேயும் படத்தில் வருவார் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.





