நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் நடித்துவரும் திரிஷா, இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஹீரோயின் ஆக திரிஷா நடித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். வயது 40்களை கடந்தும் இன்னும் 25 வயது பெண் போல திரிஷா மிக அழகாக தோற்றமளிக்கிறார் என ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர். பொன்னியின் செல்வனுக்கு பிறகு, சம்பளத்தை ரூ. 4 கோடியாக உயர்த்திய திரிஷா இப்போது ரூ. 10 கோடி சம்பளம் கேட்கிறார்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக, வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தில் வீரப்பன் கேரக்டரை மையப்படுத்திய வீரபத்ரன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு நேர்காணலில், திரிஷா உடன் லியோ படத்தில் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக அந்த படத்தில் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்புவை போல, திரிஷாவை கட்டிலில் தூக்கிப் போடலாம் என நினைத்தேன். 150 படங்களில் அதுபோன்ற நிறைய அட்டூழியங்களை நான் செய்திருக்கிறேன். ஆனால், காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கில் திரிஷாவை என் கண்ணுல கூட காட்டலே, என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இந்த பதிவை சமீபத்தில் பார்த்து, ஆத்திரமடைந்த நடிகை திரிஷா மிக கோபமாக தனது பதிவை எக்ஸ்சில் பதிவிட்டுள்ளார். அதில், மன்சூர் அலிகான் பேசிய ஒரு வீடியோவை நானும் பார்த்தேன். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது மிகவும் செக்ஸிஸ்ட் ஆக உள்ளது. மிகவும் அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான பேச்சாக இது உள்ளது. மிகவும் அருவெறுப்பான பேச்சாக, மோசமாக மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
இவரை போன்ற மோசமான ஒரு நடிகருடன் இதுவரை நான் நடித்தது இல்லை.இனிமேலும் அதுபோன்று என் கேரியரில் நடக்காமல் நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்.இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே அவமானம் என பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காமெடியாக பேசுவதாக நினைத்து, திரிஷா குறித்து வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மன்சூர் அலிகான்.





