- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் கை காட்டும் இடத்தில் நான் அதை செய்யத் தயாராக இருக்கிறேன், முகநூலில் வீடியோ வெளியிட்டு...

அவர் கை காட்டும் இடத்தில் நான் அதை செய்யத் தயாராக இருக்கிறேன், முகநூலில் வீடியோ வெளியிட்டு பேசிய நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா

- Advertisement -

தமிழ் சினிமாவில் எஸ்ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக தன் கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. வாலியில் இரட்டை நாயகர் கேரக்டரில் அஜித்குமார் நடித்திருந்தார். சிம்ரன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படம் எஸ்ஜே சூர்யா, அஜித்குமார் இருவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவரும் எஸ்ஜே சூர்யாதான். இந்த படமும் விஜய் சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படமும் மிகப்ரெிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய், ஜோதிகா திரைப் பயணத்தில் திருப்பு முனை படமாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து நடிகராக நடிக்க ஆரம்பித்த எஸ்ஜே சூர்யா நியூ, கள்வனின் காதலி, அ ஆ உள்ளிட்ட சில படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். தயாரிப்பாளராகவும் எஸ்ஜே சூர்யா அந்த படங்களை தயாரித்தார். அந்நேரத்தில் சில சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார். இதையடுத்து தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன எஸ்ஜே சூர்யா, மீண்டும் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இறைவியை தொடர்ந்து இசை, ஸ்பைடர், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு, மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் நடித்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். ராகவா லாரன்ஸ் ஆரம்பத்திலிருந்து, மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். கோடிக்கணக்கில் மக்களுக்கு உதவுகிறார் என்பது பலரும் அறிந்த தகவல்தான்.

- Advertisement -

இந்நிலையில் வரும் மே 1ம் தேதி மாற்றம் உங்கள் சேவை என்ற அமைப்பை தொடங்குகிறார். இந்த அமைப்பில் இணைவதாக நடிகர் எஸ்ஜே சூர்யா, முகநூலில் வீடியோ பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, எல்லோருக்கும் வணக்கம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு மிகச் சிறந்த மனிதர். அன்புமிக்கவர் தாயுள்ளம் கொண்டவர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதர் ஜிகர்தண்டா படம் மூலம் எனக்கு நண்பராக அமைந்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். அவர், தொடர்ந்து நிறைய உதவிகள் செய்து வருகிறார்.

வரும் மே 1ஆம் தேதி மாற்றம் உங்கள் சேவை என்ற ஒரு திட்டத்தை மாஸ்டர் துவக்கி மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறார். உங்கள் கையால் நேரடியாக ஒருவருக்கு உதவுவது என்ற அடிப்படையில், இந்த அமைப்பை அவர் தொடங்க இருக்கிறார். இந்த அமைப்பில் மே 1ல் நானும் இணைகிறேன். அன்று அவர் யாருக்கு உதவி செய்ய கை காட்டுகிறாரோ, அவர் கை காட்டியவருக்கு நான் நேரடியாக சென்று உதவி செய்ய மகிழ்ச்சியாக காத்திருக்கிறேன். அவரது சிறந்த இந்த திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் என, எஸ்ஜே சூர்யா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்