இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் என்றாலே, அது வேற லெவலில் தரமான சம்பவங்களாக இருக்கின்றன. இதனால் அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்கின்றனர். அவரது படங்களை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.
பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவான வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தந்தார். அதன்பிறகு காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக்கி அவர் இயக்கிய படம் விடுதலை. கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. மிகப்பெரிய ஹிட்டை தந்தது.
ஆனால் அந்த படத்தின் 2ம் பாகத்தை 2 ஆண்டுகளாக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இன்னும் படம் முடியவில்லை. இந்த 2ம் பாகத்தில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்த நடிகர் சூரி அடுத்து கருடன் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த படம் திரைக்கு வர இருக்கிறது. அதே போல் கொட்டுக்களி என்ற அவரது படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், சூரி நடித்த விடுதலை 2ம் பாகம் இரண்டு ஆணடுகள் கடந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பது ரசிகர்களை கடும் அதிருப்தியடைய செய்திருக்கிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் கிளைக்கதையை உருவாக்கி, அது சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், படம் நீண்டுகொண்டே போகிறது. பிறகு எடுக்கப்பட்ட காட்சிகளை வேண்டாம் என மறுத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்றும் கூறப்படுகிறது.
இப்படியே படக்காட்சிகளை எடுப்பது, பிறகு நிராகரிப்பது, புது ஸ்கிரிப்ட் எழுதுவது என டைரக்டர் வெற்றிமாறன் தொடர்ந்து நேரத்தை வீணடித்து வருகிறார், இப்போது தென்காசியில் விடுதலை 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் 3 நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லீவ் விட்டு, ஸ்கிரிப்ட் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
விடுதலை 2 படத்தில் பிஸியாக நடித்து வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் சென்னைக்கு வந்த நிலையிலும், தென்காசியில் விடுதலை 2 ஷூட்டிங் பரபரப்பாக நடந்துள்ளது. ஆனால் அங்கு நடித்துக்கொண்டிருந்தவர் எஸ்ஜே சூர்யா. திடீரென அவரை களத்தில் இறக்கியிருக்கிறார் வெற்றிமாறன். இனி அவருக்கான பிளாஷ்பேக் கதையை சொல்ல ஆரம்பித்தால், இன்னும் எத்தனை மாதங்கள் நீளுமோ என ரசிகர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார் என்று ரசிகர்களே புலம்பத் துவங்கி விட்டனர்.





