- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் ஆசையாக கொடுத்த காரை இப்படியா பண்றது? எஸ்.ஜே.சூர்யாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்

அஜித் ஆசையாக கொடுத்த காரை இப்படியா பண்றது? எஸ்.ஜே.சூர்யாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்

- Advertisement -

எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான  வில்லன் நடிகராக வலம் வருகிறார். அவர் சினிமாவுக்குள் வந்த புதிதில் தொடக்கத்தில் பாரதிராஜா, வஸந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். “கிழக்கு சீமையிலே”, “ஆசை’ போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்து போவார் எஸ்.ஜே.சூர்யா. அதன் பின் அஜித்தை வைத்து “வாலி” திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தனது முதல் திரைப்படத்தை வெற்றி படமாக ஆக்கி தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.

“வாலி” திரைப்படம் அஜித்தின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாகும். இதில் அஜித், அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். தம்பி மனைவியின் மீது ஆசைப்படும் கதாப்பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார் அஜித். வாய் பேச முடியாத அக்கதாப்பாத்திரத்தில் தனது முக பாவனைகளின் மூலமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார் அஜித்.

- Advertisement -

“வாலி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு விலை உயர்ந்த ஒரு காரையும் ஒரு பைக்கையும் பரிசாக அளித்திருந்தாராம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யாவிடம் , “அஜித் பரிசாக அளித்த அந்த காரும் பைக்கும் இப்போது இருக்கிறதா?” என்று நிருபர் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “ஒரு காரின் வயது 12 வருடங்கள்தான். ஆதலால் அந்த காரை எனது தந்தைக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டேன். அதே போல் பைக்கையும் எனது நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டேன்” என்று கூறினார். இந்த பேட்டி வைரலாக பரவி வர, ரசிகர்கள் பலரும், “அஜித் கொடுத்த பரிசு எவ்வளவு ஸ்பெஷலானது” என்று கருத்து கூறி வருகின்றனர்.

- Advertisement -

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு அஜித்குமார் தனது உலக பைக் பயணமான பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்