- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சய்யை நான் என்னமோ நினைச்சேன், ஆனா அவர் கடைசில இப்படி பண்ணிட்டாரு- ஓப்பனாக பேசிய...

ஜேசன் சஞ்சய்யை நான் என்னமோ நினைச்சேன், ஆனா அவர் கடைசில இப்படி பண்ணிட்டாரு- ஓப்பனாக பேசிய எஸ்.ஜே.சூர்யா

- Advertisement -

விஜய்யின் மகனான ஜேசன் விஜய், “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் “நான் அடிச்சா தாங்கமாட்ட” பாடலில் நடனமாடி இருந்தார். அந்த சமயத்தில் அவர் சிறுவனாக இருந்தார். ஆதலால் அவர் வளர்ந்த பின் விஜய் ஹீரோவாக அறிமுகப்படுத்துவார் என்றே கூறப்பட்டது.

ஆனால் ஜேசன் சஞ்சய்யின் திட்டமே வேறு ஒன்றாக இருந்தது. ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உறைந்துப்போனார்கள்.

- Advertisement -

ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் கூட அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்துதான் லைகா நிறுவனத்திற்காக ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நிச்சயம் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய பேரன், விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

- Advertisement -

அதன்படி ஜேசன் சஞ்சய் நிச்சயம் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்துதான் படம் இயக்குவார் என கூறப்படுகிறது. ஒரு பக்கம் இப்படி என்றால், இன்னொரு பக்கம் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் விஜய் நிச்சயம் கேமியோ ரோலில் நடிப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஜேசன் சஞ்சய் ஒரு நடிகராக வருவார் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் அவர் இயக்குனராக ஆகவேண்டும் என விரும்புகிறார். அதனால் ஒன்றும் இல்லை. எனினும் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. பல பேர் இயக்குனராக ஆகி நடிகராக ஆகியிருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய்யும் பின்னாளில் நடிகராக ஆகலாம்” என கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்