- Advertisement -
Homeபொழுதுபோக்குஏற்கனவே ஆளாளுக்கு லிஸ்ட் போட்டு திட்டறாங்க… இதுல இவர் வேற இப்படி சொல்லிட்டாரே? - நடிகர்...

ஏற்கனவே ஆளாளுக்கு லிஸ்ட் போட்டு திட்டறாங்க… இதுல இவர் வேற இப்படி சொல்லிட்டாரே? – நடிகர் நாகர்ஜூனா பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்த புதிதில் நடிகர் தனுஷை ஆளாளுக்கு உருவக்கேலி செய்தனர். ஒல்லிப்பிச்சான் நடிகர் என்றுதான் அவரை சினிமா செய்திகளில் கிண்டலாக குறிப்பிடுவது வழக்கம். இதை நடிகர் தனுஷே ஒருமுறை மேடையில் பேசும்போது குறிப்பிட்டு இருக்கிறார். ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று இனி என்னை யாரும் சொல்ல மாட்டார்கள். என்னைவிட ஒல்லியாக அனிருத் வந்துவிட்டார் என்றும் காமெடியாக பேசியிருந்தார்.

அதே நேரத்தில் நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தனது பன்முக தன்மையை வெளிப்படுத்தி இன்று ஒரு ஸ்டார் இமேஜில் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் குபேரா படம் வெளியானது. 2 நாட்களில் ரூ. 55 கோடி வசூலை அந்த படம் செய்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார் என்று அவர்களது ரசிகர்களே விமர்சிக்கும் அளவுக்கு தெனாவெட்டாக அவரது பேச்சு இருந்தது. தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க, ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது, என்னை யாரும் அழிக்க முடியாது என வீரமான வசனங்களை எல்லாம் மேடையில் பேசினார்.

ரஜினி விஜய் போன்ற ஜாம்பவான் நட்சத்திரங்கள் மேடையில் இப்படி பேசினால், மக்கள் அதை ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விஜய், ரஜினி ரேஞ்சுக்கு தன்னை தனுஷ் நினைத்துக்கொண்டு இப்படி பேசியது பெரிய காமெடி என்று இணையத்தில் பலரும் ட்ரோல் செய்தனர். இதற்கிடையே குபேரா படத்துக்கும் எதிமறையான விமர்சனங்களே அதிகமாக வந்துக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

குபேரா போன்ற ஒரு படத்தில் தனுஷ் நடித்திருக்கவே கூடாது, 3 மணி நேரம் இந்த படம் எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தனுஷ் நடித்திருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, குபேரா படத்தின் ஹீரோவே நான்தான் என்று பேசி தனுஷ் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றி இருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாகர்ஜூனா கூறியதாவது, நான் குபேரா படத்தில் நடித்த போது என்னை ஹீரோவாக நான் உணர்ந்தேன். படத்தின் முழு கதையும் தீபக் என்ற என் கேரக்டரை சுற்றியே நகர்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த படம் தீபக்கின் படமாகவே உள்ளது என்று கூறியிருக்கிறார். இது தனுஷ் ரசிகர்களுக் உச்சக்கட்ட கடுப்பை விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்