- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியாகும் எஸ்கே 23 படம் குறித்த அப்டேட் - சிங்க...

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியாகும் எஸ்கே 23 படம் குறித்த அப்டேட் – சிங்க நடை போடும் உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். நடிகர் முரளி மகன் அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆன படம்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிக்க கமிட் ஆன போது, புறநானூறு என இந்த படத்துக்கு சுதா கொங்கரா டைட்டில் வைத்தார். ஆனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் 52 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மெரினா படத்தின் மூலம் நாயகனாக நடித்து அறிமுகமான சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 22 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் அமரன்தான் 22வது படமாகும். வேலைக்காரன் காக்கி சட்டை எதிர்நீச்சல் அமரன் மாவீரன் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படமும் பழைய படத்தின் டைட்டிலா சிவகார்த்திகேயனுக்கு அமைந்திருக்கிறது.

இதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்கே 23. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்களே உள்ளன. இப்போது இந்தி நடிகர் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதி எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. இதில் 15 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய போர்ஷன் பாக்கியிருக்கிறது.

- Advertisement -

அதனால் பராசக்தி படப்பிடிப்பின் இடையே 15 நாட்கள் ஏஆர் முருகதாஸ் இயக்கும் தனது 23வது படப்பிடிப்பிலும் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை எடுத்த வரை போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் முடித்திருப்பதால் ஜூன் மாதமே படத்தின் பர்ஸ்ட் காபி ரெடியாகி விட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் திரைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் வருகிற 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ஆகும். கடந்த 1985ம் ஆண்டில் பிறந்த சிவகார்த்திகேயன், வருகிற 17ம் தேதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதை முன்னிட்டு வருகிற 17ம் தேதி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்துக்கு சிங்க நடை என டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்