- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் பட இயக்குனர்களை குறி வைக்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? தமிழரசன் பச்சமுத்து இயக்கும் எஸ்கே நடிக்கும்...

தனுஷ் பட இயக்குனர்களை குறி வைக்கிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? தமிழரசன் பச்சமுத்து இயக்கும் எஸ்கே நடிக்கும் படத்தின் கதைக்களம் இதுவா?

- Advertisement -

எப்போதுமே சிறந்த வெற்றிப் படங்களை தந்த இயக்குனர்களை ஹீரோக்கள் குறிவைத்து தனது படங்களை இயக்க வாய்ப்பு தருகின்றனர். அதுதான் ரஜினிக்கும் பல படங்களில் பாலிசியாக இருந்துள்ளது. அப்படிதான் கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் நெல்சன் பா ரஞ்சித் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்தார்.

அதே வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அமரன். இந்த படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்போது தனுஷ் நடிக்கும் 55 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு தனுஷ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படத்துக்கு டி56 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் முழுவதும் மதுரையில் நடக்கிறது. இதற்காக மதுரையில் ஆபிஸ் அமைத்து ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் தமிழரசன் பச்சமுத்து ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே தமிழரசன் பச்சமுத்து இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தனுஷ் படத்தை இயக்கிய பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து டைரக்ட் செய்ய உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே லப்பர் பந்து படத்தில் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி அவர் படம் இயக்கி இருந்தார். இதில் அட்டக்கத்தி தினேஷ் ஹரீஷ் கல்யாண் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படமும் ஸ்போர்ட்ஸ் கதை தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் லப்பர் பந்து 2ம் பாகமாக இந்த படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இப்படி தனுஷ் பட இயக்குனரை சிவகார்த்திகேயன் குறிவைத்து தனது படத்தை இயக்க வைப்பதாகவும் ஒரு விமர்சனம் கோலிவுட்டில் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்