- Advertisement -
Homeபொழுதுபோக்குசித்தா படம் தந்த நம்பிக்கை, இறுகப்பற்று படத்திலும் தொடர வாய்ப்பு - தமிழ் சினிமாவுக்கு புத்துயிர்...

சித்தா படம் தந்த நம்பிக்கை, இறுகப்பற்று படத்திலும் தொடர வாய்ப்பு – தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் தரும் சின்ன பட்ஜெட் படங்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில், பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்படும் பல படங்கள் தோல்வியை அடைகின்றன. அதே நேரத்தில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்றுத் தரவும் செய்கின்றன. மாபெரும் தோல்விக்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான இறைவன் படத்தையும், அபார வெற்றிக்கு ஜெயிலர் படத்தையும் சொல்லலாம். அதே வேளையில், மார்க் ஆண்டனி போன்ற சராசரி வெற்றிப் படங்களும், பலமடங்கு வெற்றியை தருவதும் நடக்கிறது.

அந்த வரிசையில் இல்லாமல், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படம் படங்களும் அவ்வப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவே இருந்திருக்கின்றன. காக்கா முட்டை அதற்கு மிகச்சிறந்த உதாரணம். சமீபத்தில் ஓராண்டுக்குள் வெளிவந்த அயோத்தி, குட்நைட், மாமன்னன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

இதற்கிடையே மார்க் ஆண்டனி படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஷால், ரூ. 3 கோடி, ரூ. 4 கோடி என பணத்தை எடுத்துக்கொண்டு, சின்ன பட்ஜெட்டில் சினிமா எடுக்க வந்துவிடாதீர்கள். அந்த பணத்தை வேறு வழிகளில் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது பலத்த சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அதே வேளையில் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களை, நல்ல தரமான கதை, சிறப்பான கதை இருந்தால் வரவேற்க ரசிகர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்பதை, சமீபத்தில் வெளியான சித்தா படம் நிரூபித்திருக்கிறது. நடிகர் சித்தார்த் நடிப்பில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அதே போல் வரும் 6ம் தேதி, தமிழில் ஒரே நாளில் பத்து படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம், சிநேகா நடித்த ஷாட் பூட் த்ரீ, திரிஷா நடித்த தி ரோடு, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 800, விக்ரம் பிரபு, ஸ்ரத்தா நடித்த இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் அதிக கவனத்தை பெற்றுள்ளன.

இதில், சித்தா படத்தை போலவே உணர்வுகளை பற்றிய படமாக இறுகப்பற்று படமும் எடுக்கப்பட்டுள்ளது, இறுகப்பற்று படம் கணவன், மனைவி உறவை பற்றிய, உணர்வுகளை சொல்லக்கூடிய ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் சித்தாவை தொடர்ந்து, இறுகப்பற்று படமும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றால் தொடர்ந்து, குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள், தமிழ் சினிமாவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சற்று முன்