- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் உடனான எனது திரைப்படம் இப்படித்தான் இருக்கும்... முதல்முறையாக மனம் திறந்த பார்க்கிங் பட இயக்குனர்....

எஸ்டிஆர் உடனான எனது திரைப்படம் இப்படித்தான் இருக்கும்… முதல்முறையாக மனம் திறந்த பார்க்கிங் பட இயக்குனர்….

- Advertisement -

சிம்புவிற்கு கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக சிம்புவிற்கு எந்த திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு.

கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக்சனை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவரது 49-வது திரைப்படத்தை இயக்குகிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே பார்க்கிங் என்னும் திரைப்படத்தை எடுத்து பலரது பாராட்டையும் பெற்றிருந்ததால் இந்த கூட்டணி மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் இந்த திரைப்படத்தின் மூலம் பெரிய ஹீரோ உடன் இணைந்து நடிக்கிறார். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கயாது லோகரும் இந்த திரைப்படத்தில் இருக்கிறார். இப்படி பெரிய கூட்டணி அமைந்துள்ளது இந்த திரைப்படத்தின் பிளஸ் ஆகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அண்மையில் படத்தின் பூஜை நடந்தது. அதில் வேட்டி சட்டையில் கலக்கலாக வந்திருந்தார் சிம்பு. இந்த நிலையில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை இயக்குனர் பகிர்ந்து உள்ளார். அதில், இதில் சிலம்பரசன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். இந்த கதையை எழுதும்போதே சிம்புவை மனதில் நினைத்துதான் செயல்பட்டேன். அதிர்ஷ்டமாக அவரே நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். மன்மதன் வல்லவன் போன்ற படங்களில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகும்.

ஹீரோவுக்கு அடுத்து ஒரு லீட் ரோலில் நடிக்கிறார் சந்தானம். வெறும் காமெடி மட்டும் அல்லாமல் அவருக்கு எமோஷனலான காட்சிகளும் இருக்கின்றன. நான் ஏற்கனவே சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அதனால் எங்களுக்குள் ஒரு சந்திப்பு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்