- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் நடித்த சினேகாவுக்கு இப்படி ஒரு சிக்கலா? பிரச்னைக்கு உடனடியாக தீர்வை கண்டுபிடித்த...

தி கோட் படத்தில் நடித்த சினேகாவுக்கு இப்படி ஒரு சிக்கலா? பிரச்னைக்கு உடனடியாக தீர்வை கண்டுபிடித்த இயக்குனர் வெங்கட்பிரபு – பெருமூச்சு விட்ட விஜய் படக்குழு!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதியன்று, விநாயகர் சதுர்த்தியன்று திரைக்கு வர இருக்கிறது.

தி கோட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் படம் சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஎப்எக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தி கோட் படத்தின் டப்பிங் பணிகள் இரண்டு கட்டங்களாக நடந்த நிலையில், விஜய் ஏற்கனவே டப்பிங் பணியை முடித்து விட்டார். இப்போது படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகள் டப்பிங் பேசும் பணிகள் துவங்கியுள்ளன.

இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர். 3வது கேரக்டர் ஒன்றில் விஜய் நடித்திருப்பதாகவும் அவருக்கு ஜோடி இல்லை என்றும் தெரிய வருகிறது.

இந்நிலையில் நடிகை சினேகாவுக்கு டப்பிங் பேசும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அவருக்கு பின்னணி குரல் பேச டப்பிங் கலைஞர் சவீதா என்பவரை ஏற்பாடு செய்துள்ளனர். இவர் சிம்ரன், ஜோதிகா என பிரபல நாயகிகளுக்கு டப்பிங் குரல் பேசியவர். அதனால் தி கோட் படத்தில் சினேகாவுக்கு சவீதா டப்பிங் பேச வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.

ஆனால் கடைசியில் சவீதாவை படக்குழு தொடர்பு கொண்டபோது அவர், அமெரிக்காவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும் ஒரு மாதம் கழித்துதான் திரும்பி வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் டப்பிங் பேசுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில் என்ன செய்வதென தெரியாமல் படக்குழு தடுமாறியுள்ளது.

இதையடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு, மொபைல் டப்பிங் வாகனம் மூலம் சவீதாவை டப்பிங் பேச வைத்து, அதற்கேற்ப சென்னையில் இருந்து சினேகா நடித்த காட்சிகளை சவீதா பேசும் வசனங்களுடன் இணைத்து, அவரது டப்பிங் பணியை சிறப்பாக முடித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இப்படி ஒரு தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் இருந்தபடியே, சினேகா நடித்த காட்சிகளுக்கு வசனம் பேசி தந்திருக்கிறார் டப்பிங் கலைஞர் சவீதா. இதுதான் இப்போது தி கோட் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சற்று முன்