- Advertisement -
Homeபொழுதுபோக்குசட்டசபையில் எல்லை மீறும் சில அமைச்சர்கள் - தொடர்ந்து ட்ரோலில் சிக்கும் முதல்வர் விஜய், இனியாவது...

சட்டசபையில் எல்லை மீறும் சில அமைச்சர்கள் – தொடர்ந்து ட்ரோலில் சிக்கும் முதல்வர் விஜய், இனியாவது கடிவாளம் போடுவாரா தளபதி?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்கட்சி திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். சட்டசபை சபாநாயகராக ஜேடிசி பிரபாகர் அவை முன்னவராக செங்கோட்டையன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். சட்டசபை கூட்டம் தொடர் நிகழ்ச்சிகளில் நேரலையாக டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் ரமேஷ் ராஜ்மோகன் உள்ளிட்டோர் சட்டசபையில் பேசும் போது பல நேரங்களில் எல்லை மீறுகின்றனர். திமுக அதிமுக சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், நீங்க என்ன பெரிய யோக்கியமா? என்ற கோணத்தில் எதிர்கேள்வி கேட்பதே இந்த அமைச்சர்களின் போக்காக உள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி எந்த துறை சார்ந்த கேள்வி கேட்டாலும் இவர்களே மாறி மாறி எழுந்து பேசுகின்றனர். முதல்வர் விஜய் சார்ந்த துறைகளுக்கு கூட விஜய் பதில் தராமல் ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் ராஜ்மோகன் பதில் தருவது வழக்கமாக உள்ளது. மேலும் திமுகவின் மூத்த முன்னாள் அமைச்சர்கள் பலமுறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களை கூட சிறிதும் மதிப்பதில்லை.

எதற்கெடுத்தாலும் அவர்களை எதிர்த்து பேசுவதும் எள்ளி நகையாடுவதும் கிண்டல் கேலி செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதை நேரலையில் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைக்கிறது. அதிலும் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், முன்னாள் திமுக அமைச்சரை கரூர் கம்பெனி என்றார். பதிலுக்கு அவரை சங்கி அமைச்சர் என்று உதயநிதி பேசும்போது குறிப்பிட்டார்.

- Advertisement -

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்தவர் என்க, அப்போது பாத்ரூமில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு அமைச்சரா என்று உதயநிதி திருப்பிக் கேள்வி கேட்க சட்டசபையே ஒரு கட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இத்தனை களேபரங்கள் நடந்தாலும் பட்டு வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை போல அமர்ந்து சிரித்தபடி விஜய் அதை வேடிக்கை பார்க்கிறார். இதை எல்லாம் பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், சட்டசபை என்ற மாண்பே போய்விட்டது என்று புலம்புகின்றனர்.

இப்படி பல நாட்களாக தொடர்கிறது. ஜேடிசி பிரபாகர் தவெகவினரை தொடர்ந்து எச்சரித்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் பலவும் காற்றில் பறந்து விட்டன. இதற்கிடையே சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற நடிகை திரிஷா, எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ. 75 ஆயிரம் என விஜய் அறிவித்தது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இதற்கிடையே இப்படி எல்லை மீறும் அமைச்சர்களுக்கு சற்று கடிவாளம் போடுவது முதல்வர் விஜய்க்கு நல்லது என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்