- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாரா இப்படி இரட்டை வேடம் போடுவது ஏன்? மற்றவர்களின் கஷ்டத்தை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா? -...

நடிகை நயன்தாரா இப்படி இரட்டை வேடம் போடுவது ஏன்? மற்றவர்களின் கஷ்டத்தை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா? – திருப்பூர் சுப்ரமணியம் ஆவேசம்!

- Advertisement -

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் அறிமுக நடிகர் நடிகைகளாக இருக்கும் போது தயாரிப்பாளர் இயக்குனர் சொல்கிற படி அவர்கள் கேட்டு பணிந்து நடப்பார்கள். ஆனால் அவர்களே நட்சத்திர நடிகர் நடிகையாக வளர்ந்த பிறகு அவர்கள் சொல்கிறபடி இயக்குனர் தயாரிப்பாளர் கேட்கும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறிவிடும்.

ஆனால் எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக மாறிய போதும் இன்னும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற மூத்த நடிகர்களிடம் அந்த தன்மை கேட்டுக்கொள்ளும் பணிவும் மாறவில்லை. இப்போதும் படப்பிடிப்பு தளத்தில் கேரவனுக்கு செல்வதாக இருந்தால் கூட இயக்குனரிடம் சொல்லிவிட்டு செல்வதுதான் ரஜினியின் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

அதே போல் கமல் என்னும் மகா கலைஞனுக்குள் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளரும் இருக்கிறார். இயக்குனரும் இருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் அவ்வப்போது கமல்ஹாசனின் டச்சிங் இருக்கும். ஆனால் இயக்குனரின் நோக்கத்தை சிதைக்காதபடி அவரது நடிப்பு காட்சிக்கு மெருகேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அஜீத்குமார் நயன்தாரா போன்றவர்கள் வளர்ந்து நட்சத்திரங்களாக மாறிய பிறகு அவர்கள் நடித்த படங்களின் பிரமோசன்களுக்கு கூட வருவதில்லை. ஆனால் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் பிரமோசன்களுக்கு மட்டுமே வருவார். சமீபத்தில் டாக்ஸிக் மற்றும் ஹாய் படங்களில் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, நயன்தாரா தனது கணவர் தயாரிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துக்கொள்கிறார். ஆனால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் போது இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அவர் மறுப்பது ஏன்?

இப்படி நயன்தாரா இரட்டை வேடம் போடுவது சரியா? மற்ற தயாரிப்பாளர்களின் கஷ்டங்களையும் சூழ்நிலைகளையும் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். நடிகர் அஜீத்குமாரும் நயன்தாராவும் ஆரம்பத்தில் அவர்களது படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள்தான். ஆனால் வளர்ந்த பிறகு வரமாட்டோம் என்று மறுப்பது ஏன் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்