- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டின் சிறந்த படமா கருடன்?... வந்தாச்சு சூரி படத்தின் முதல் விமர்சனம்...

இந்த ஆண்டின் சிறந்த படமா கருடன்?… வந்தாச்சு சூரி படத்தின் முதல் விமர்சனம்…

- Advertisement -

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த சூரிக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது விடுதலை திரைப்படம். குமரேசன் என்னும் காவலர் கதாபாத்திரத்தை கொடுத்து, அவரை வேறு ஒரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தார் வெற்றிமாறன்.

 

- Advertisement -

இயக்குனர் கொடுத்ததை அப்படியே செய்து ரசிகர்களை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சூரியின் நடிப்பு. சுடுவேன் அய்யா என எந்த ஒரு இயல்பையும் மீறாமல் அவர் கூறிய வசனம் இன்று வரை விடுதலை பட காட்சிகளின் சிம்மாசனம். படம் ஆரம்பித்தது முதல் முடிவது வரை எந்த ஒரு இடத்திலும், அளவுக்கு அதிகமான நடிப்பை வெளிப்படுத்தாமல் சூரி மிரட்டி இருந்தார்.

 

- Advertisement -

தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இதுபோக சூரிக்கு தொடர்ந்து கதாநாயகனாகும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக கூழாங்கல் படத்தை எடுத்ததன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த வினோத்குமார் இயக்கத்தில் சூரி நடித்திருக்கிறார்.

 

இந்தப் படத்திற்கு கொட்டுக்காளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூரிக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தில், சூரி கழுத்தில் அடிபட்டது போல படம் முழுக்க நடித்திருக்கிறார். மேலும் தொண்டை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நிறையவே சிரமப்பட்டு இருக்கிறார் சூரி.

 

அடுத்ததாக அவர் வெற்றிமாறன் கதையிலும் கருடன் படத்தில் நடித்திருக்கிறார். சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 

மே 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது பத்திரிகையாளர்களுக்கு இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் கருடன் திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார்கள். அதாவது நட்பையும் விசுவாசத்தையும் மையப்படுத்திய இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், சூரியும் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் கைத்தட்டல்களை பெற்றிருப்பதாக கூறி இருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சியில் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே இப்போதைக்கு இதுதான் சிறந்த படம் என்று பலரும் கூறியிருப்பதால் கருடன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

- Advertisement -

சற்று முன்