- Advertisement -
Homeபொழுதுபோக்குஜல்லிக்கட்டு போல அதுவும் ஒரு வீர விளையாட்டுதான்... இத்தனை காலம் இது எனக்கு தெரியாம போச்சு......

ஜல்லிக்கட்டு போல அதுவும் ஒரு வீர விளையாட்டுதான்… இத்தனை காலம் இது எனக்கு தெரியாம போச்சு… மண்டாடி படம் குறித்து மனம் திறந்த நடிகர் சூரி…

- Advertisement -

நகைச்சுவை நடிகர் சூரி தற்போது கதாநாயகனாக மாறிவிட்டார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கு விதை போட்டது இயக்குனர் வெற்றிமாறன்தான். தனது விடுதலை திரைப்படத்தின் மூலம் தான் சூரியை கதாநாயகனாக மாற்றினார் வெற்றிமாறன்.

அதில் குமரேசன் என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் சூரி. இவ்வளவு நாட்கள் காமெடி அடித்துக் கொண்டிருந்த சூரியா இது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அந்த அளவுக்கு, மிகவும் நேர்த்தியாக தனது ரோலை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இப்படியான சூழலில் சூரியின் நடிப்பிற்கு தீனி போடும் விதமாக அமைந்த மற்றொரு திரைப்படம், கொட்டுக்காளி.

பி எஸ் வினோத்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம். அதை எந்த அளவு கச்சிதமாக செய்ய முடியுமோ அதை சரியாக செய்திருந்தார் சூரி. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அடுத்ததாக கமர்சியல் தளத்தில் அவர் நடித்த கருடன் திரைப்படமும் மிகுந்த வரவேற்பு பெற்றது. வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். சசிகுமாருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான கதையோட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லாபத்தை கொடுத்தது.

அடுத்ததாக மாமன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சூரி. விலங்கு வெப் சீரிசை இயக்கியவர்தான் இதனை எடுத்திருக்கிறார். சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்டார் நடித்திருந்த இந்த திரைப்படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சூரியின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மண்டாடி என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை, வெற்றிமாறன் உதவியாளர் மணிமாறன் இயக்கி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே செல்ஃபி என்னும் படத்தை எடுத்திருந்தார். இந்த நிலையில் மண்டாடி படம் குறித்து பேசி இருக்கும் சூரி, இந்தப் படத்திற்கு வெற்றிமாறன் சார் தான் என்னை பரிந்துரைத்தார். போட் ரேஸை மையப்படுத்தியதுதான் இந்த படம். இந்த விளையாட்டு இன்னும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ராமநாதபுரத்தில் உள்ள இந்த விளையாட்டு பற்றி 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எனக்கு கூட தெரியவில்லை. தரையில் ஜல்லிக்கட்டு என்றால் தண்ணீரில் இப்படி ஒரு வீர விளையாட்டு உள்ளது. இப்படி ஒரு விளையாட்டை கொண்டு வருவதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

சற்று முன்