- Advertisement -
Homeபொழுதுபோக்குமீனவப் பெண்ணுக்கு அடித்தது லக்கி பிரைஸ்… பிக்பாஸ் பிரபலம் சினிமாவில் அறிமுகம் - குவியும் வாழ்த்துகள்!

மீனவப் பெண்ணுக்கு அடித்தது லக்கி பிரைஸ்… பிக்பாஸ் பிரபலம் சினிமாவில் அறிமுகம் – குவியும் வாழ்த்துகள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உறியடி படம் நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் நல்ல கவனத்தையும் பெற்ற வெற்றி படமாகும். இந்த படத்தில் டைரக்ட் செய்து விஜயகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். அதனால் உறியடி விஜயகுமார் என்று அவர் ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். இந்த படத்தை தொடர்ந்து உறியடி 2 பாகமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரும் உறியடி விஜயகுமாருக்கு கிடைத்தது. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்துக்கு உறியடி விஜயகுமார் தான் வசனம் எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து பைட் கிளப் எலக்சன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ஆக்சன் ஹீரோவாகவும் உறியடி விஜயகுமார் மாறினார்.

- Advertisement -

இப்போது இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உறியடி விஜயகுமார் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி இந்த படத்திற்கு அறிவு என டைட்டில் வைக்கப்பட்ட போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார்.

பெண்களின் உரிமைகள் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள் மற்றும் பெண்களின் மனவலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அறிவு திரைப்படம் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் படமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அறிவு படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மீனவப் பெண் சுபிக்சா நடித்து வருகிறார். அறிவு படம் மூலம் பிக்பாஸ் சுபிக்சா நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகிறார். அறிவு படத்தில் சுபிக்‌ஷா நடிப்பது அந்த படத்தின் டைட்டில் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுபிக்சாவும் முக்கியமான ஒரு கேரக்டரில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அறிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுபிக்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அறிவு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது நீண்ட நாள் கனவான நடிப்பு பயணம் அறிவு திரைப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளது. இதற்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் என சுபிக்சா அதில் கூறியுள்ளார். பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் சுபிக்சாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்