- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் - இந்த படமாவது தனுஷூக்கு வெற்றியை கொடுக்குமா?...

ஓம் படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் – இந்த படமாவது தனுஷூக்கு வெற்றியை கொடுக்குமா? இயக்குனருக்கும் பெரிய சிக்கல் இருக்குதா?

- Advertisement -

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற கிராமத்துக்கு பழமொழி சினிமாத்துறைக்கு சரியாக பொருந்துகிறது. மார்க்கெட் இமேஜ் இருக்கும் போதே அதிக படங்களில் நடித்தால் தான் கல்லா கட்ட முடியும். நல்ல கதை வரட்டும் நல்ல இயக்குனர் கிடைக்கட்டும் என்று காத்துக்கொண்டு இருந்தால் இமேஜ் காலியாகி விடும் என்பதை சில நடிகர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் தொடர்ந்து லைன் அப்களில் இருந்து வருபவர் நடிகர் தனுஷ். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் நடித்த இயக்கிய 50வது படம் ராயன் பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு பிறகு தனுஷ் படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை என்பதே உண்மை.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் மில்லன் குபேரா இட்லி கடை கர என தனுஷ் நடித்த படங்கள் எல்லாமே மொக்கை படங்களாக தான் இருந்தன. குபேரா படம் தெலுங்கில் மட்டும் நன்றாக போக காரணம், அதில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்திருந்ததால் அங்கு அந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

கேப்டன் மில்லர் படத்தை இயக்கியது அருண் மாதேஸ்வரன். வழக்கம்போல படம் முழுவதும் வன்முறை காட்சிகளே இருந்தன. இட்லி கடை படமும் கர படமும் தனுஷ் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதனால் ஓம் படத்தை அவர் பெரிய அளவில் எதிர்பார்த்து பிளாக்பஸ்டர் வெற்றியை தரும் என்று ஆர்வமாக உள்ளார்.

- Advertisement -

அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு ஓம் படம் பெரிய வெற்றியை தர வேண்டும். அமரன் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதற்கேற்ப படத்தை தரமாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமாகவும் தர வேண்டும்.

அதனால் ஜெயிலர் 2 படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி ரிலீஸாகும் நிலையில் 16ம் தேதி ஓம் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளனர். வருகிற நவம்பர் 23ம் தேதிக்கு ரிலீஸ்சை தள்ளி வைக்கவும் முடிவு செய்துள்ளனர். படத்தின் எடிட்டிங் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. எனினும் மாஜி மாமனார் ரஜினியுடன் மோத வேண்டாம் என்று தனுஷ் பலமுறை கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்