- Advertisement -
Homeபொழுதுபோக்குவிறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி 69 ஷூட்டிங், இயக்குனர் எச் வினோத்துக்கு நடிகர் விஜய் போட்ட...

விறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி 69 ஷூட்டிங், இயக்குனர் எச் வினோத்துக்கு நடிகர் விஜய் போட்ட திடீர் உத்தரவு – அந்த படம் தந்த பாதிப்பாக இருக்குமோ?

- Advertisement -

தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது நடித்துவரும் படம் தளபதி 69. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை இயக்கும் எச் வினோத் ஏற்கனவே தீரன் அதிகாரம் 1, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். அதனால் தளபதி 69 படமும் அவரது இயக்கத்தில் நிச்சயமாக பெரிய அளவில் பேசப்படும் வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய், போலீஸ் அதிகாரியாக பணியில் இருந்து பிறகு சில காரணங்களால் அந்த பணியில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். மீண்டும் அவரது வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களால் மீண்டும் அவர் போலீஸ் அதிகாரியாக வில்லன்களை பழி தீர்ப்பதே கதையாக இருக்கும் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது.

கடந்த மாதம் 5ம் தேதி கேரளா, பையனூரில் துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பில், விஜய் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்போது சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார். சண்டை மற்றும் பாடல் காட்சிகளுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டில் அக்டோபர் மாதம்தான் இந்த படம் ரிலீஸாக உள்ளது என்றாலும், படப்பிடிப்பு குறித்து நடிகர் விஜய், இயக்குனர் எச் வினோத்துக்கு திடீர் கண்டிசன் போட்டுள்ளார். அதன்படி வருகிற 90 நாட்கள் அதாவது 3 மாதங்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த கட்சி பணிகளில் முழு தீவிரமும் ஈடுபாடும் காட்ட இருப்பதால், 3 மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும். ஏனென்றால் கட்சி பணிகள் எனக்கு நிறைய இருக்கின்றன. அதில் நான் முழுகவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுடன் விஜய் நடிக்கும் காட்சிகளை எச் வினோத் பரபரப்பாக படம்பிடித்து வருகிறார். அதனால் அதிக நாட்கள் பிரேக் இல்லாமல் ஷூட்டிங்கை வேகமாக நடத்தி முடிக்கவும் எச். வினோத் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்