- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த துயர சம்பவம்… ஜனநாயகன் படத்துக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டதே…? வெளியான...

கரூரில் நடந்த துயர சம்பவம்… ஜனநாயகன் படத்துக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டதே…? வெளியான லேட்டஸ்ட் தகவல் – விரக்தியில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. மேலும் வருகிற டிசம்பர் மாதம் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தவும் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த விழாவில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாக விஜய் பாடிய ஒரு பாடலும் தீபாவளி பண்டியை முன்னிட்டு ஜனநாயகன் படத்தில் இருந்து வெளியிட முடிவாகி இருந்தது.

ஆனால் இதில் எதுவுமே இனி நடக்கப் போவதில்லை என்பதுதான் இன்றைய முக்கிய தகவலாக உள்ளது. ஏனெனில் ஜனநாயகன் படத்தில் விஜய் பாடிய பாடலை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கரூரில் நடந்த துயர சம்பவம் காரணமாக அந்த பாடல் ரிலீசை படக்குழு ரத்து செய்துவிட்டது. இப்போதைய சூழலில் அந்த பாடல் வெளியாவது பெரிய அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தலாம்.

- Advertisement -

அதே போல் மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருந்த இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்படுவதோடு, ஜனநாயகன் படம் ரிலீஸ்சும் தள்ளிப் போகவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கரூர் துயர சம்பவம் அந்தளவுக்கு பெரிய பாதிப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் படம் வெளியாவது விஜய்க்கு கடும் சோதனையாக அமைய வாய்ப்புள்ளது.

மேலும் இதில் மற்றொரு முக்கிய தகவலாக ஜனநாயகன் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 121 கோடி ரூபாய் விலை கொடுத்து டிஜிட்டல் உரிமம் வாங்கியிருந்தது. இப்போது அவ்வளவு விலை கொடுக்க முடியாது. கரூர் துயர சம்பவம் காரணமாக படத்துக்கு முன்னர் நிர்ணயித்த விலை இல்லை என்று கைவிரித்து விட்டது. அதன்பிறகு 109 கோடி ரூபாய்க் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ஜனநாயகன் படத்தை வாங்கியுள்ளது.

- Advertisement -

அத்துடன் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு இன்னும் சாட்டிலைட் வியாபாரம் நடக்கவில்லை. வழக்கமாக சன் டிவிதான் விஜய் நடித்த படங்களை பெரும்பாலும் வாங்கும். ஆனால் திமுகவுக்கு எதிராக அரசியல் களத்தில் விஜய் நிற்பதால் ஜனநாயகன் படத்தை சன் நெட்ஒர்க் இந்த முறை நிராகரித்து விட்டது. அதனால் அடுத்து விஜய் டிவி அல்லது ஜீ டிவி இந்த இரண்டில் ஒன்றுதான் விஜய் படத்தை வாங்க முன்வர வேண்டும். ஆனால் விலை அதிகம் சொன்னதால் விஜய் டிவி ஜனநாயகன் படத்தை வாங்க மறுத்துவிட்டது. ஏனெனில் அதிக விலை கொடுத்து படத்தை வாங்க விஜய் டிவி தயாராக இல்லை.

அடுத்து ஜீ டிவியும் ஜனநாயகன் படத்தை வாங்க முன்வரவில்லை. ஏனெனில் ஏற்கனவே விஜய் நடித்த தி கோட் படத்தை சாட்டிலைட் உரிமம் பெற்றது ஜீ டிவிதான். ஆனால் வாங்கிய விலைக்கு தி கோட் படம் லாபம் தராமல் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதால் ஜீ டிவியும் ஜனநாயகன் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் சாட்டிலைட் வியாபாரம் ஆகாமல் ஜனநாயகன் படம் இன்னும் உள்ளதால் அதன் காரணமாகவும் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்