- Advertisement -
Homeபொழுதுபோக்குமூத்த மகள் கதாநாயகி… இளைய மகள் இயக்குனர், நட்சத்திர குடும்பத்தில் இருந்து களத்தில் குதிக்கும்...

மூத்த மகள் கதாநாயகி… இளைய மகள் இயக்குனர், நட்சத்திர குடும்பத்தில் இருந்து களத்தில் குதிக்கும் வாரிசுகள் – அவர்களும் ஜொலிப்பார்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து வாரிசுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அன்று நடிகர் சிவாஜி கணேசன் மகன் பிரபுவும் முத்துராமன் மகன் கார்த்திக்கும் சினிமாவில் வாரிசுகளாக அறிமுகமாகினர். இப்போது பிரபு மகன் விக்ரம் பிரபுவும் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கும் வாரிசுகளாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதே போல் சூர்யா கார்த்தி சிபிராஜ் அதர்வா சண்முகபாண்டியன் ஸ்ருதிஹாசன் அக்சராஹாசன் அதிதி ஷங்கர் என பல வாரிசுகள் சினிமாவில் நடிக்க வந்துவிட்டனர். சினிமா துறை சார்ந்தவர்கள் தயாரிப்பாளர் இயக்குனர் பாடகர் இசையமைப்பாளர் என யாருடைய வாரிசு வந்தாலும் சினிமாவில் உழைப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும்.

- Advertisement -

இதில் இயக்குனர்களின் வாரிசுகளாக களத்தில் இறங்கிய செல்வராகவன் தனுஷ் விஜய் ரவிமோகன் என பலரும் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர். தொடர்ந்தும் பலர் சினிமாவுக்குள் வாரிசுகளாக வந்துக்கொண்டு இருக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் 2 பேர் சினிமா களத்தில் குதிக்க உள்ளனர்.

மும்பையில் இந்தி படங்களில் நடித்த நடிகை குஷ்பு, தமிழில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். ரஜினி கமல் பிரபு கார்த்திக் சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார். 1990களில் முன்னணி நடிகையாக பல வெற்றிக் படங்களில் நடித்தார்.

- Advertisement -

பிறகு இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அவந்திகா அனந்திகா என 2 மகள்கள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடிகை குஷ்பு, அவ்னி சினிமேக்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். சுந்தர் சி இயக்கும் படங்களை அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி 3 படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு பிறகு அவர் 3 படங்களை தயாரிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை இளைய மகள் அனந்திகா டைரக்ட் செய்கிறார். மேலும் ஒரு படத்தில் மூத்த மகள் அவந்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சுந்தர் சி குஷ்பு தம்பதியின் 2 மகள்களும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள நிலையில், தங்களது பெற்றோரை போலவே ஜொலிப்பார்களா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்