- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜித்குமாருக்கு அந்த உணர்வே சுத்தமாக கிடையாது, அப்போதுதான் எனக்கு அது தெரிந்தது; பகீர் உண்மையை...

நடிகர் அஜித்குமாருக்கு அந்த உணர்வே சுத்தமாக கிடையாது, அப்போதுதான் எனக்கு அது தெரிந்தது; பகீர் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்

- Advertisement -

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களாக ஒருவராக இருந்து வருகிறார். நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் இந்த நான்கு பேரும் தான் இப்போது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தராமல், லாபத்தை மட்டுமே அள்ளித் தரக்கூடிய முக்கிய நடிகர்களாக இருக்கின்றனர். அதனால் அஜித்குமார் படத்தை இயக்க இயக்குனர்களும், அஜித் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்களும் தவம் இருக்கின்றனர்.

நடிகர் அஜித்தை பொருத்தவரை சினிமாவை காட்டிலும் அவருக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம். அதனால் சின்ன வயதில் நிறைய பைக் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். கார் போட்டியிலும் கலந்து கொள்கிறார். துப்பாக்கி சுடுவது, கைகளால் ஹெலிகாப்டர் இயக்குவது போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகிறார். அஜீத்தை போலவே, அவரது மகனும் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு, வெளி மாநிலங்களுக்கு பைக்கில் நீண்ட தூரம் டூர் செல்வது அவருக்கு மிகவும் பிடித்தமானது. சமீபத்தில் அவரது மனைவி ஷாலினி, அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காஸ்ட்லி பைக்கை பரிசளித்து அவரை மிகவும் சந்தோஷப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பைக் ரேஸ்களின் போது, சிலமுறை விபத்துகளில் சிக்கி இருக்கிறார். இதனால் அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் 28 சர்ஜரி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நிறைய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகரும், இயக்கருமான சுந்தர் சி கூறுகையில், உன்னைத் தேடி என்ற படத்தை நான் இயக்கினேன். அந்த படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்தார்.

அந்த படத்தில் நடிக்கும் போது அஜித்குமாருக்கு காலில் உணர்வுகளே இல்லை. முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன்களால் அப்படி ஆகிவிட்டது. நாம் காலில் ஒரு அடி எடுத்து வைத்தால், அதை நமது மூளை உணரும். அதையடுத்து அடுத்த அடியை எடுத்து வைப்போம். ஆனால் அவருக்கு அந்த உணர்வு சுத்தமாக இல்லை. அவர் கீழே பார்த்து தான் நடக்க வேண்டும்.

ஒரு நாள் சாலக்குடியில் படப்பிடிப்பு நடத்தினோம். தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும். அந்த தண்ணீர் சில்லென இருந்தது. எங்களால் அந்த தண்ணீருக்குள் கால் வைத்து நடக்கவே முடியவில்லை. ஆனால் அஜித்குமார் தண்ணீருக்குள் சாதாரணமாக நடந்து வந்தார். நீங்க ஹீரோதான், அதுக்காக இப்படியா என்று நான் விளையாட்டாக, சிரித்துக் கொண்டே கேட்டேன். அதற்கு அவர், எனக்கு எதுவுமே தெரியல சார் என்று சொன்னார். இப்படி எல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான், இதையெல்லாம் மீறித்தான் அஜித்குமார் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார், என்று சுந்தர் சி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்