- Advertisement -
Homeபொழுதுபோக்குகலகலப்பு 3 படத்தை திடீரென கிடப்பில் போட்டுவிட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற டைரக்டர் சுந்தர்...

கலகலப்பு 3 படத்தை திடீரென கிடப்பில் போட்டுவிட்டு, குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற டைரக்டர் சுந்தர் சி – அட இப்படி ஒரு பெரிய தூண்டிலை போடுறாரா?

- Advertisement -

இந்த ஆண்டு துவக்கம் முதல் நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகாத நிலையில், தமிழ் சினிமாவில் மானத்தை காப்பாற்றுவது போல வந்த படம்தான் அரண்மனை 4. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், 100 கோடி ரூபாய் வசூலையும் கடந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை சுந்தர் சியின் பேய் படம்தான் காப்பாற்றி இருக்கிறது.

ஏற்கனவே அரண்மனை என்ற பெயரில் 3 பாகங்களை இயக்கிய சுந்தர் சி 4வது படமாக அரண்மனை 4 படத்தை இயக்கினார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட் ஆன நிலையில், கடைசி நேரத்தில் அவர் நடிக்க முடியாமல் போக, சுந்தர் சியே ஹீரோவாகவும் நடித்தார். தமன்னா, ராஷிக்கண்ணா என 2 கவர்ச்சி புயல்களை அரண்மைனக்குள் விட்ட சுந்தர் சி நினைத்தபடியே பெரிய வெற்றியை பெற்றார்.

அரண்மனை 4 படத்தின் வெற்றிதான் அரண்மனை 5 படத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், எதிர்பார்த்ததை போல இந்த படமும் மாபெரும் ஹிட் படமாகி விட்டது. அதனால், அடுத்த ஆண்டில் அரண்மனை 5 படம் வெளியாக வாய்ப்புள்ளது. அல்லது சில ஆண்டுகள் கழித்து அந்த படத்தை இயக்க சுந்தர் சி முன்வரலாம்.

அரண்மனை 4 வெற்றி தந்த சந்தோஷத்துடன், கலகலப்பு 3 படத்தை இயக்கும் ஆயத்த பணிகளில் சுந்தர் சி ஆர்வம் காட்டினார். வருகிற ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை கும்பகோணத்தில் அவர் துவக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் சுந்தர் சி. கலகலப்பு 3 படம் இப்போதைக்கு இல்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளார்.

ஏனெனில் அரண்மனை 4 என்ற 100 கோடி ரூபாய் வசூல் செய்த பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ள சுந்தர் சிக்கு, பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு தானாக தேடிவரும். ஏனெனில், எப்போதுமே பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்களை முன்னணி நடிகர்கள் தேடிவந்து கால்ஷீட் கொடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் அந்த நேரத்தில் கைகலப்பு 3 படத்தை ஏன் எடுக்க வேண்டும் என்று சுந்தர் சி முடிவெடுத்து, அதை ஒத்தி வைத்துவிட்டார்.

இப்போது தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுந்தர் சி சுற்றுலா சென்றுள்ளார். ஓரிரு வாரங்கள் அல்லது ஓரு மாதம் வரை வெளிநாட்டில் அவர் சுற்றுலாவில் இருக்கிறார். அதற்கு பின்தான் குடும்பத்துடன் சென்னை திரும்புகிறார். அதற்குள் ஏதேனும் ஒரு பெரிய ஹீரோ படம் தூண்டிலில் மாட்டினால், அந்த படத்தை இயக்கலாம். அதற்கு பிறகு வேறு படங்களே இல்லாத போது கலகலப்பு 3, அரண்மனை 5 போன்ற படங்களை இயக்கலாம் என்றும் சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்