- Advertisement -
Homeபொழுதுபோக்குஹைதராபாத்தில் நடந்த சம்பவம்... இதுல போய் யாராவது மோசடி செய்வாங்களா... விரக்தி அடைந்த ராயன் பட...

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்… இதுல போய் யாராவது மோசடி செய்வாங்களா… விரக்தி அடைந்த ராயன் பட நடிகர்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படத்தில் துடிப்பான ஒரு இளைஞனாகவும், தவறுகளை தட்டிக் கேட்கும் நபராகவும் நடித்து சபாஷ் போட வைத்திருப்பார் அவர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷனின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

 

- Advertisement -

தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவர் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக அவருக்கு தெலுங்கில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் மைக்கேல் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியிருந்த அந்த திரைப்படம், படுமோசமான விமர்சனத்தை பெற்றது.

 

- Advertisement -

இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் சந்தீப் இடம் பிடித்திருப்பார். அதில் தனுஷின் நண்பராக நடித்திருக்கும் அவர், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து மாஸ் காட்டி இருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷிற்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தனது ஐம்பதாவது திரைப்படமான, ராயனில் சந்தீப்பை நடிக்க வைத்தார் தனுஷ். அவருக்கு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், சந்தீப்பின் கதாபாத்திரம் பேசிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அவரது நடிப்பும் மிக இயல்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர்.

 

இப்படியான சூழலில் ஹைதராபாத்தில் உள்ள சந்தீப் கிஷனின் உணவகத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன அரிசியை உணவகத்தில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. உணவகத்தில் சில குறைபாடுகளை கண்டுபிடித்து அதற்கான சம்மன் ஒன்றையும் நடிகருக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் தற்போது இது குறித்து சந்தீப் கிஷன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில், எங்கள் உணவகத்தில் ஏழு கிளைகள் இருக்கின்றன. இங்கிருந்து நாள்தோறும் 350 உணவு பாக்கெட்டுகளை ஏழை எளியோருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். ஒரு மாதத்திற்கு கணக்கு பார்த்தால் இதுவே 4 லட்ச ரூபாய் ஆகிறது. இப்படி செய்யும் நாங்கள், காலாவதியான அரிசியை பயன்படுத்தி பணத்தை மிச்சம் பிடிப்போமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இது மட்டுமல்ல தனது உணவகத்தில் நடத்தப்பட்டது வழக்கமான ரைட்தான் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்