- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை கண்டிப்பாக அதற்கு வாய்ப்பில்லை, இப்படி ஏமாற்றி விட்டாரே ஏஆர் ரகுமான் - வருத்தப்படும்...

இந்த முறை கண்டிப்பாக அதற்கு வாய்ப்பில்லை, இப்படி ஏமாற்றி விட்டாரே ஏஆர் ரகுமான் – வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரகுமான். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே சின்ன சின்ன ஆசை பாடலுக்கு தேசிய விருது பெற்றார். இதுவரை மொத்தம் 7 தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் இருக்கிறார்.

சமீபத்தில் அவரது மனைவி சாயிரா பானு, தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இருவரும் பிரிவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு ஏஆர் ரகுமானும், எங்களது பிரிவை ஏற்றுக்கொண்டு எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், தற்போது 97வது ஆஸ்கர் விருதுக்கான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. சினிமா உலகில் மிகவும் தலைசிறந்த உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்படுகிறது. உலக அளவில் சினிமா படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஒரு விருதாக ஆஸ்கர் விருது உள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 97வது ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய சினிமவில் இருந்து லாபட்டா லேடீஸ் என்ற திரைப்படம் நுழைவு பட்டியலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

மொத்தம் 85 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இறுதி பட்டியலில் 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்திய சினிமாவில் எதிர்பார்க்கப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம், நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது. அதே போல், ஆடுஜீவிதம் படத்துக்காக சிறந்த இசையமைப்பு பிரிவு 2 பாடல்கள் இடம்பெற்ற பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது.

அதனால் இந்த முறை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது. இதனால் ஏஆர் ரகுமான் இசை ரசிகர்கள், இப்படி ஏமாற்றி விட்டாரே என்று புலம்பி வருகின்றனர். இந்த முறை 3வது முறையாக ஏஆர் ரகுமான் ஆஸ்கர் விருது பெறுவார், ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இசை, அதை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்