- Advertisement -
Homeபொழுதுபோக்குசரத்குமார் பற்றவைத்த நெருப்பு, பற்றி எரிந்த ஜெயிலர் படம், ரசிகர்களே அசந்து போன தரமான சம்பவம்

சரத்குமார் பற்றவைத்த நெருப்பு, பற்றி எரிந்த ஜெயிலர் படம், ரசிகர்களே அசந்து போன தரமான சம்பவம்

- Advertisement -

“வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதுதான் இப்போது வரை மிகப் பெரிய சர்ச்சையாக உருமாறி வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே “ஜெயிலர்” ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா-கழுகு கதை விஜய் ரசிகர்களை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. மேலும் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் பேசியபோது, “72 வயதில் உங்களுக்காக தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றால் அப்போது சொல்லிக்கொள்ளுங்கள் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார் என்று” என கூறியது எரிமலையில் பெட்ரோல் ஊற்றியது போல் ஆனது.

இவ்வாறு சூப்பர் ஸ்டார் சர்ச்சைகள் குறித்து பல களேபரங்கள் போய்க்கொண்டிருக்கிறது. பல சினிமா பத்திரிக்கையாளர்களும் பிரபலங்களும் இந்த சர்ச்சையை குறித்து சமீப நாட்களாக தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஒரு சிலர், ரஜினிதான் சூப்பர் ஸ்டார் எனவும், வேறு சிலர், “விஜய்தான் ரஜினியை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார். ஆதலால் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் தகுதியானவர்தான்” என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

எனினும் சரத்குமார் பற்றவைத்த நெருப்பு “ஜெயிலர்” திரைப்படத்திற்கு சாதகமாகவே வேலை செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் சர்ச்சை “ஜெயிலர்” திரைப்படத்திற்கு ஒரு இலவச புரொமோஷனாக ஆகியுள்ளதாம். ரஜினிகாந்த் ரசிகர்கள் அல்லாத பல சாதாரண சினிமா ரசிகர்கள் கூட, “ரஜினியை எப்படி சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லலாம்” என கொந்தளித்து “ஜெயிலர்” திரைப்படத்தை பார்க்க ஆவலோடு டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்களாம்.

இதனால் முன்பதிவு தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே தமிழகம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டே கிடைக்காதது போல் அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தனவாம். குறிப்பாக அமெரிக்காவில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றதாம். நாளை 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் சரத்குமாரால் உருவான சர்ச்சையால் “ஜெயிலர்” திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்பே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்