- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி ரிலீஸாக தயாரான 2 படங்கள்… நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விக்ரம் மகன்...

தீபாவளி ரிலீஸாக தயாரான 2 படங்கள்… நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் – ஆட்டம் சூடு பிடிக்குதே?

- Advertisement -

சினிமாவில் சில படங்களை தயாரிக்கும் போதே பண்டிகை கால படங்களாக திட்டமிட்டு எடுப்பதுதான் வழக்கம். அதை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கூட அதிகமாக விரும்புவார்கள். ஏனெனில் பொங்கல் தீபாவளி விநாயகர் சதுர்த்தி ஆயுதபூஜை கிறிஸ்துமஸ் என முக்கிய பண்டிகை காலங்களில் படங்கள் வெளியாவது அதிக லாபம் தருகிறது.

அதனால்தான் கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் இதுபோன்ற பண்டிகை நாட்களை குறிவைத்து வந்தன. விடுமுறை காலத்தில் மக்கள் அதிகளவில் தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரும்போது பெரிய அளவில் வசூல் அதிகரிக்கிறது.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி போன்றவர்களின் படங்கள் எப்போதுமே பண்டிகை கால படங்களாக தான் இருக்கின்றன. காமெடி கலாட்டாவாக உருவாக்கப்படும் அவரது படங்களை பண்டிகை காலங்களில் தியேட்டர்களில் பார்ப்பது இன்னும் அந்த பண்டிகை நாட்களை உற்சாகப்படுத்துவதும் ஒரு முக்கியமான காரணம்.

ஆனால் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களே எங்களுக்கு பெரிய பண்டிகை நாட்கள்தான் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து பல ஆண்டுகளாகி விட்டது. அதனால் அந்த நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களையே பண்டிகை திருவிழா போல கொண்டாடி அமர்க்கப்படுத்தி விடுகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது வருகிற தீபாவளி பண்டிகைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதில் ரஜினி கமல் விஜய் அஜீத் குமார் படங்கள் எதுவும் தீபாவளிக்கு இல்லை. கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதியே ரிலீஸாகி விடுகிறது. கமல் நடித்த தக்ஃலைப் படமும் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாகிறது.

விஜய் நடித்த ஜனநாயகன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான். அதே போல் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படமே வரும் நவம்பரில்தான் துவங்குகிறது. இந்த சூழலில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த வேட்டை கருப்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் ஆகிய படங்கள்தான் இப்போதைக்கு தீபாவளி ரிலீஸ் லிஸ்ட்டில் முதலில் இருக்கின்றன. வரும் நாட்களில் லிஸட்டில் இன்னும் பல படங்கள் சேரலாம்.

- Advertisement -

சற்று முன்