- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெய்பீம் படத்தில் நடித்த தெலுங்கு நடிகருக்கு தங்க நாணயம் பரிசளித்த நடிகர் சூர்யா - அப்போ...

ஜெய்பீம் படத்தில் நடித்த தெலுங்கு நடிகருக்கு தங்க நாணயம் பரிசளித்த நடிகர் சூர்யா – அப்போ சூர்யா சொன்னதுதான் இதில் ஹைலைட்!

- Advertisement -

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரமேஷ் ராவ். புஷ்பா முதல் பாகத்தில் எம்எல்ஏ ஆகவும், புஷ்பா 2 படத்தில் எம்எல்ஏ வாக இருந்து, ஹீரோ அல்லு அர்ஜூன் உதவியால் முதலமைச்சர் ஆகிவிடும் கேரக்டரில் நடித்தவர்தான் ரமேஷ் ராவ்.

இவர் தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்திலும் வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது போலீஸ் விசாரணையில் ஸ்டேஷன் லாக்கப்பில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், நடிகர் சூர்யாவுக்கு எதிராக வாதாடும் சீனியர் வக்கீல் கேரக்டரில் ரமேஷ் ராவ் நடித்திருப்பார்.

- Advertisement -

பெரும்பாலான படங்களில் ரமேஷ் ராவ் இதுபோன்ற நெகடிவ் ரோல்களில்தான் நடித்திருக்கிறார். குறிப்பாக ஜெய் பீம், புஷ்பா படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றிருக்கிறார். அத்துடன் வேட்டையன் பிரதர் சந்திரமுகி 2 யசோதா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களிலும் ரமேஷ் ராவ் நடித்தவர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய ரமேஷ் ராவ், ஜெய்பீம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியை சமீபத்தில் கூறியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு எதிரான வக்கீல் கேரக்டரில் நடித்த ரமேஷ் ராவ், தெலுங்கு மொழி நடிகராக இருந்தும் தமிழில் பேசி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த நேர்காணலில் இதுபற்றி கூறிய தெலுங்கு நடிகர் ரமேஷ் ராவ், ஜெய்பீம் படத்தில் நானே தமிழில் டயலாக் பேசியிருந்தேன். அதனால் நடிகர் சூர்யா, நான் தமிழில் பேசியதை பாராட்டி, என்னுடைய கேரவனுக்கு வந்து எனக்கு கோல்டு காயின் பரிசாக அளித்தார். சார் நம்ம மொழிக்கு நீங்கள் செய்த மரியாதைக்காக என்று சொல்லி கொடுத்தார்.

இது நீங்கள் இந்த கதாபாத்திரத்துக்காக செய்த பங்களிப்புக்காகவும் இதை பரிசாக தருகிறேன் என்றும் அப்போது சொன்னார். ஷெட்டில் இருந்த அனைவரும் லைட்மேன் உள்பட அனைவரும் என்னை தைட்டி பாராட்டி என்னை கௌரவம் செய்து அனுப்பி வைத்தனர். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு மரியாதை தருகின்றனர், மதிக்கின்றனர் என்பது எனக்கு பெருமையாக இருந்தது, என்று ரமேஷ் ராவ் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்