- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த 2 படங்களுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? ரீ ரீலீஸ் செய்யப்படும் சூர்யா - கார்த்தி...

இந்த 2 படங்களுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? ரீ ரீலீஸ் செய்யப்படும் சூர்யா – கார்த்தி படங்கள் – போடு வெடிய என ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படும் சீனியர் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா கார்த்தி. இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கின்றனர். சூர்யா நடிப்பில் அடுத்து கருப்பு படம் வெளியாக உள்ளது. அதே போல் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் வெளிவர இருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டில் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் அயன். இந்த படத்தில் நாயகனாக சூர்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பிரபு ஜெகன் கருணாஸ் ரேணுகா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

அயன் படம் வெளியான அந்த காலகட்டத்தில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் வீடோக்கடே என்கிற தலைப்பில் அயன் படம் வெளியாகி தெலுங்கு பதிப்பில் மட்டும் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தில் சூர்யாவின் ஆக்சன் அதிரடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

தெலுங்கு மொழியில் வீடோக்கடே படம் வெளியாகி இப்போது கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு பிறகு இப்போது தெலுங்கு வீடடோக்கடே படத்தை ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் வருகிற ஜூலை 19ம் தேதி அன்று ரி ரிலீஸ் செய்து வெளியிடப்படுகிறது. சூர்யாவின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தெலுங்கில் சூர்யா நடிப்பில் வெளியான வீடோக்கடே படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

அதேபோல் நடிகர் கார்த்தி நடித்த படம் அவரா தெலுங்கில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் தமன்னா இணைந்து நடித்த படம் பையா. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் அவரா என்ற தெலுங்கு பதிப்பில் வெளியானது. அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பையா படம், தெலுங்கு பதிப்பில் அவரா என்ற டைட்டிலில், பிரமாண்டமான 4 கே தரத்தில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி ரி ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை திருப்பதி டாலர் என்கிற நிறுவனம் விநியோகம் செய்கிறது. அயன் படத்தில் சூர்யாவுக்கும், பையா படத்தில் கார்த்திக்கும் தமன்னா தான் ஜோடி. 2 படங்களிலுமே கதாநாயகி தமன்னா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்