தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படமும், கமல் நடித்த விக்ரம் படமும் அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறாத நிலையிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த பான் இந்தியா படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் உபேந்திரா அமீர்கான் நாகர்ஜூனா சௌபிர் சாஹிர் ஸ்ருதிஹாசன் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கூலி படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் விரைவில் கதாநாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாக இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன்தான் டைரக்ட் செய்கிறார்.
இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி இந்த படத்தில் நடிகர் சூர்யாவும் நடிக்க உள்ளார். அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்த நிலையில், அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு குறுகிய கால படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து நடிக்க உள்ளார்.
ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்திலும் சூர்யா நடித்திருந்தார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய படத்தில் சூர்யாவும் நடிக்கிறார். அதனால் இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





