- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு மணி நேரத்துக்கு மேல் தனியாக சந்தித்து பேசிய வெற்றிமாறன், சூர்யா - வாடிவாசல் குறித்து...

ஒரு மணி நேரத்துக்கு மேல் தனியாக சந்தித்து பேசிய வெற்றிமாறன், சூர்யா – வாடிவாசல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் – சூர்யா விலகினாரா?

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அதுதவிர ஹாலிவுட் படம் ஒன்றில் சூர்யா நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிறது.

வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் ஏற்கனவே முடிவான படம் வாடிவாசல். இந்த படத்துக்காக ஏற்கனவே முன்னோட்டமாக சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக வெற்றிமாறனின் நண்பர், மறைந்த வெற்றி துரைசாமிக்கு சொந்தமான காளை பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க ஒப்பந்தமான நிலையில், பருத்திவீரன் பஞ்சாயத்து காரணமாக, சூர்யா அந்த படத்தில் நடிப்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏனெனில் அமீருக்கு பதில் மலையாள நடிகர் மோகன்லால் அந்த கேரக்டரில் நடிக்கலாம். நான் கால்ஷீட் வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறார் சூர்யா. அதனால் கடுப்பான வெற்றிமாறன், அந்த கேரக்டரில் அமீர்தான் நடிக்க வேண்டும். உங்களுக்கு சிரமம் என்றால், விலகிக்கொள்ளுங்கள் என, நேரடியாகவே கூறிவிட்டார்.

இந்த சூழலில் மும்பையில் குடும்பத்துடன் சூர்யா, குடியேறி விட்டார். இந்தி பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத் தருவதாக கூறி, சூர்யாவை இதற்கு சம்மதிக்க வைத்துள்ளார் அவரது மனைவி ஜோதிகா. இந்த விஷயத்தில் ஜோதிகாவின் சகோதரி, மாஜி கதாநாயகி நக்மா, பக்கபலமாக இருப்பதால் இந்தி படம் ஒன்றில் நடிக்க உடனே கமிட் ஆகியிருக்கிறார் சூர்யா.

- Advertisement -

விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவரும் வெற்றிமாறன், அந்த படத்தை முடித்தவுடன் வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெற்றிமாறனும், நடிகர் சூர்யாவும் நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் மிகவும் சீரியஸாக பேசியுள்ளனர். வாடிவாசல் படம் குறித்து பல விஷயங்களை இருவரும் ஆலோசித்து உள்ளனர்.

இதையடுத்து வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகும் முடிவில் பேசி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து வாடிவாசல் படத்தில் சூர்யா கேரக்டரில் வழக்கம்போல வெற்றிமாறனின் ஆஸ்தான நாயகன் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தகவலாக உள்ளதே தவிர, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் 90 சதவீதம் இதுதான் உண்மையான தகவல் எனத் தெரிய வருகிறது.

- Advertisement -

சற்று முன்