- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ரோ படப்பிடிப்பில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா, அட்வைஸ் செய்து நடிகர் சூர்யாவை கட்டுப்படுத்திய நண்பர்...

ரெட்ரோ படப்பிடிப்பில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா, அட்வைஸ் செய்து நடிகர் சூர்யாவை கட்டுப்படுத்திய நண்பர் – என்ன ப்ரோ இதெல்லாம்?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்தாண்டில் நவம்பர் 14ம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் நெருப்பு மாதிரி இருக்கும், 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்ட இந்த படம் இந்தியன் 2 படத்தை மிஞ்சும் அளவுக்கு பிளாப் படமாக இருந்தது.

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி, மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பிலும் நடிகர் சூர்யா கலந்துக்கொண்டார். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பை மையமாக கொண்ட அந்த படத்தில் கதையிலும், காட்சியிலும் சூர்யா பல திருத்தங்களும் மாற்றங்களும் செய்ய சொன்னார்.

- Advertisement -

இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும், இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த படத்தை விட்டு சூர்யா வெளியேறினார். இப்போது அதே கதையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். வருகிற மே 1ம் தேதி ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த விவகாரம் ஒன்று இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ரெட்ரோ படத்திலும் சூர்யா நடிக்க வேண்டிய சில காட்சிகளை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். அப்போது சில காட்சிகளை இப்படி மாத்துங்க, அப்படி மாத்துங்க என்று அவரை டார்ச்சர் செய்திருக்கிறார். மேலும் சில காட்சிகளில் நடிகர் சூர்யா நடிக்க மறுத்து பிரச்னை செய்திருக்கிறார். அதுவரை படத்தின் பாதி ஷூட்டிங் நடந்த நிலையில் இது பலத்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது சூர்யாவின் நெருங்கிய நண்பர் ஒருவர், இந்த தகவலை அறிந்த நிலையில், ஏற்கனவே புறநானூறு என்ற நல்ல படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். இந்த படத்திலும் பிரச்னை செய்து உங்களுக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். இயக்குனர் சொல்கிறபடி நடித்துக்கொடுங்கள் என்று அட்வைஸ் செய்த பின்புதான், அந்த காட்சிகளில் சூர்யா நடித்தார் என்ற இந்த தகவலை, வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்