- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 43 பட சூட்டிங் எங்கு ஆரம்பம் ஆகுது தெரியுமா... சுதா கொங்கராவின் சூப்பர் திட்டம்..

சூர்யா 43 பட சூட்டிங் எங்கு ஆரம்பம் ஆகுது தெரியுமா… சுதா கொங்கராவின் சூப்பர் திட்டம்..

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, தற்போது நிறைவேற்றுள்ளது. தொடர்ந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே அதன் இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகபதிபாபு என ஏராளமான நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். அனேகமாக இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சூர்யா வாடிவாசல் படத்தில் தான் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில், சுதா கொங்கரா உடன் இணைந்தார் சூர்யா. இதற்குக் காரணம் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவது தான். அந்தப் பணிகள், முடிய இன்னும் நாளாகும் என தெரிய வந்துள்ளதால் இதன் இடைவேளையில் சுதா கொங்கராவுடன் இணைய சூர்யா திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓடிடி தளத்தில் இது வெளியாகி இருந்தாலும், சூர்யாவின் தேர்ந்த நடிப்பு, பொருத்தமான திரைக்கதை, கூர்மையான வசனங்கள் போன்ற காரணத்தால் படம் ஹிட் அடித்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் தட்டிச் சென்றது. படத்தில், மாறன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த சூர்யாவும் தேசிய விருது பெற்றார்.

- Advertisement -

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்க்கும் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது. இப்படியான சூழலில், சூர்யா – சுதா கொங்கரா – ஜிவி பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் சர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பெயர் புறநானூறு என்பதில் முடியும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கிறாராம். அதற்காக உடல் எடையை குறைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதன் இதன் படபிடிப்பு பணிகள் இந்த மாதத்தில் மூன்றாவது வாரம் தொடங்குகிறது. முதலில் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் படத்தை எடுக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளாராம். பிறகு திருச்சி மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் சூட்டிங் நடைபெறுகிறது. விரைவில் இதன் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு இந்த வருடமே படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்