- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை குறி தப்பாது, ஜெயிலர் 2 படத்தில் நடக்கப் போகும் தரமான சம்பவம், ரஜினியுடன்...

இந்த முறை குறி தப்பாது, ஜெயிலர் 2 படத்தில் நடக்கப் போகும் தரமான சம்பவம், ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா மருமகன் தனுஷ்? – போட்றா வெடிய!

- Advertisement -

கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் வசந்த் ரவி, மோகன்லால், விநாயகம், மாரிமுத்து, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் 635 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படம் மீண்டும் ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு மாஸ் ஏற்படுத்திக் கொடுத்தது.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும், நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலாவும் மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற போதும், விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்தது.

எனினும் பீஸ்ட் படம் லாபத்தை கொடுத்த படம் தான் என்று படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்டிபிகேட் கொடுத்த நிலையில்தான், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் எதிர்பார்த்ததை விட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசை படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது என்றால் மிகையல்ல. காவாலய்யா பாட்டுக்கு தமன்னாவின் குத்தாட்டமும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது.

- Advertisement -

இந்தச் சூழலில் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு, அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். இந்த படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் டைரக்டர் நெல்சன் திலீப் குமார் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காலா படத்தில் ரஜினியுடன் அவர் மகனாக மணிகண்டன் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது, கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் வேண்டாம் என மறுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாருடன் அவரது மிகத் தீவிரமான ரசிகரும், மூத்த மருமகனுமான தனுஷ் நடிப்பது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்