- Advertisement -
Homeபொழுதுபோக்குநேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இயக்குநர் அமீர் - நடிகர் சூர்யா, அருகில் இருந்த இயக்குநர் வெற்றிமாறன்...

நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இயக்குநர் அமீர் – நடிகர் சூர்யா, அருகில் இருந்த இயக்குநர் வெற்றிமாறன் – அந்த இடத்தில் நடந்த தரமான சம்பவம்

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கும், இயக்குநர் அமீருக்கும் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த மனக்கசப்பு கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்தது. அது சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மூலமாக வெடித்து அனல் பறந்தது. கோர்ட் வழக்கு நடப்பது குறித்து தகவலை அமீர் சொன்னதும் தமிழ் சினிமாவில் சூடு கிளம்பியது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்பாளியாக போற்றப்படும் சிறந்த கலைஞன் அமீர் என்பதை மறந்து திமிரான உடல்மொழியை காட்டி, தரக்குறைவாக அவரை விமர்சித்தது பலருக்கும் பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியது.

- Advertisement -

இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிக்குமார் கரு பழனியப்பன், சேரன் பொன்வண்ணன், கவிஞர் சிநேகன் பலரும் அறிக்கைகளை வெளியிட்டு, வரவு செலவு கணக்கு ஒருபுறம் இருக்கட்டும், அது உங்கள் பிரச்னை. ஆனால் அமீர் என்ற கலைஞனை, படைப்பாளியை பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இந்த சீன் எல்லாம் இங்கு போட வேண்டாம் என்று பலமாகவே ஞானவேல் ராஜாவை தாக்கினர்.

இதில் சத்தமின்றி அடங்கிப் போன ஞானவேல் ராஜா, வருத்தம் தெரிவித்து அத்துடன் வாயை மூடிக்கொண்டார். இந்த நிலையில், அமீர் தொடுத்த கோர்ட் வழக்கின் தீர்ப்பை அடுத்து, அமீருக்கு கோா்ட் சொல்கிற தொகையை தந்துவிடலாம் என்ற முடிவுக்கு சிவக்குமார் குடும்பம் வந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதில் சூர்யா நடிக்க விரும்பாத நிலையில், இழுபறி நீடித்து வந்தது. இந்த சூழலில் சூர்யா மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானார். மேலும், பாலிவுட் படம் ஒன்றிலும், ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க அவர் கமிட் ஆன நிலையில், வாடிவாசலில் நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் சூர்யா பங்கேற்றார். அப்போது இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் இருந்த இடத்துக்கு வந்த நடிகர் சூர்யா, அமீரை பார்த்ததும் கட்டியணைத்து அண்ணா, என்று அழைத்து மகிழ்ச்சியை வெளி்பபடுத்தி இருக்கிறார். இதைப் பார்த்து அருகில் இருந்த வெற்றிமாறனும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதனால் வாடிவாசல் படத்தில் அமீரும், சூர்யாவும் இணைந்து நடிப்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்