- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா போல என்னிடம் சில கதைகள் உள்ளன... சிரித்துக் கொண்டே பேசிய சிறுத்தை சிவா... தலை...

கங்குவா போல என்னிடம் சில கதைகள் உள்ளன… சிரித்துக் கொண்டே பேசிய சிறுத்தை சிவா… தலை தெறிக்க ஓடும் ரசிகர்கள்…

- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறது. சூர்யா ரசிகர்கள் இதனை கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆயிரம் கோடி வசூல் 2000 கோடி வசூல் என பேசிக் கொண்டிருந்தவர்கள் தற்போது கப்சிப் ஆகி இருக்கிறார்கள்.

 

- Advertisement -

இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சூட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார் நடிகர் சூர்யா. அவர் நடித்த திரைப்படங்களிலேயே மிக அதிக செலவில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதன் அறிவிப்பு வெளியாகும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 

- Advertisement -

ஆனால் தற்போது படம் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. விஷ்வல் ரீதியாகவும், அனிமேஷனிலும் இந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் போனதுதான் பலருக்கும் கடுப்பாக இருக்கிறது. இத்தனை கோடி ரூபாயில் படத்தை எடுத்துவிட்டு, திரைக்கதையில் அத்தனை தொய்வு இருந்தது ஏன் என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

 

இதில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சிறுவன் தொடர்பான பாச காட்சிகள் படத்திற்கு வலுவூட்டும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த சூழலில் அது சுத்தமாக செட்டாகவில்லை என்று கருத்து எழுந்துள்ளது. இதேபோல் முதல் பாதி இரண்டாம் பாதியில் கதைக்கு முக்கியத்துவமே கொடுக்கவில்லை என்று சூர்யா ரசிகர்களை கதறுகிறார்கள்.

 

படத்திற்கான நெகட்டிவ் விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வரும் சூழலில், அது இப்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சூர்யா, சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் பேசியதை இப்போது தோண்டி எடுத்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை வாயைப் பிளந்து எல்லாரும் பார்ப்பார்கள் என்று சூர்யா சொன்னது தான் இப்போது ஹைலைட் காமெடியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அது மட்டுமல்ல, கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் ஈட்டும் என்று கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அவரது இந்த தைரியத்தை பாராட்டுவதாகவும் பலர் இப்பொழுது கமெண்ட் அடித்து வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னிடம் கங்குவாவை போல ஐந்தாறு கதைகள் இருக்கிறது என்று கூறிய சிறுத்தை சிவாவைதான் சூர்யா ரசிகர்கள், வைத்து செய்கிறார்கள். திரைக்கதையிலும் அவர் கொஞ்சம் ஈடுபாட்டை காட்டி இருக்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்