- Advertisement -
Homeபொழுதுபோக்குபின்னி பெடலெடுக்கும் கங்குவா பட டிரைலர்... கத்துக்கிட்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா......

பின்னி பெடலெடுக்கும் கங்குவா பட டிரைலர்… கத்துக்கிட்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா… சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ட்ரீட்…

- Advertisement -

இந்த ஆண்டு முதலே மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட வந்த திரைப்படங்களில் ஒன்றுதான் கங்குவா. இதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் செலவழித்து இருக்கிறார் படத்தின் நாயகன் ஆன சூர்யா. விக்ரம் படத்தில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது தான் அவர் இறுதியாக வெள்ளித் திரையில் தனது முகத்தை காட்டியது.

 

- Advertisement -

விக்ரம் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், சூர்யாவின் அடுத்த படத்திற்காக இன்னும் தவமிருந்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சூர்யாவோ, பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்கச் சென்று பின்னர் அந்த முடிவை கைவிட்டு முழுக்க முழுக்க கங்குவாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

 

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது. கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ் தெலுங்கு உட்பட 10 மொழிகளுக்கு மேல் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

சூர்யாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்த திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் நம்பி இருக்கிறது. இதில் கதாநாயகியாக கியாரா அதானி நடித்திருக்கிறார். வில்லனாக மிரட்டி இருக்கிறார் பாபி தியோல்.

 

யோகி பாபு கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஒரு பீரியட் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் படத்தை இயக்குனர் நகர்த்தி இருப்பது இதற்கு முந்தைய டீசர் வெளியாகும் போதே தெரிந்தது. இந்த நிலையில் கங்குவா படத்திலிருந்து புதிய டீசர் ஒன்று வெளியாகியிருக்கிறது.

 

அதில், இரு கதாபாத்திரங்களில் சூர்யா வருவதை முதல்முறையாக காட்டியிருக்கிறார்கள். ஒரு சிறுவனை மையப்படுத்தியே படம் நகர்வதும் டீசரில் தெரிய வந்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட அதன் காட்சிகள் பிரமாண்டமாக இருப்பதால், கங்குவா நிச்சயம் சக்கைபோடு போடும் என்று சூர்யா ரசிகர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். இந்தத் திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்