- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரண்மனை 5 படம் குறித்து வெளியாகும் தகவல்களை நம்பாதீங்க, அதில் எதுவுமே உண்மை இல்லை -...

அரண்மனை 5 படம் குறித்து வெளியாகும் தகவல்களை நம்பாதீங்க, அதில் எதுவுமே உண்மை இல்லை – சுந்தர் சி மனைவி குஷ்புவே இப்படி சொல்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே காதல் படங்கள், அதிரடி சண்டை படங்கள் பெரிய வெற்றியை பெறுகின்றன. அதேபோல் பக்தி படங்களுக்கும் ரசிகர்கள் அபரிமிதமான ஆதரவு தருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் திகில் நிறைந்த திரில் படங்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதனால் தான் இயக்குனர்கள் சுந்தர் சி. அஜய் ஞானமுத்து, ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் திகில் படங்களை அடிக்கடி கொடுத்து பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் முனி படத்தை முதலில் நடித்தார். அதன் பிறகு காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய வெற்றி படங்களை கொடுத்த பிறகு, இப்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

அதேபோல் சுந்தர் சி அரண்மனை என்ற திகில் படத்தை கொடுத்தார். அந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என நான்கு படங்களை தொடர்ச்சியாக தந்துள்ளார். இப்போது அரண்மனை 5 படம் உருவாக இருப்பதாகவும், சுந்தர் சி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அஜய் ஞானமுத்து இயக்கிய 9 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய டிமான்டி காலனி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் டிமான்டி காலனி 2 படத்தை இயக்கினார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படி திகில் படங்கள் தொடர்ந்து மெகா ஹிட் படங்களாக வெற்றி பெறுகின்றன.

- Advertisement -

இந்த ஆண்டில் வெளிவந்த அரண்மனை 4 படம் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சுந்தர் சி வடிவேலு யோகி பாபு உள்ளிட்டோம் நடிக்கும் கேங்கர்ஸ் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் கடந்த சில வாரங்களாக அரண்மனை 5 படத்தை இயக்குவதற்கு சுந்தர் சி ஆயத்தமாகிவிட்டார். குரோம்பேட்டை, ஈவிபி சாலையில் 2 பங்களாக்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நடிகை குஷ்பூ, தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அரண்மனை 5 படம் குறித்து தற்போது வெளியாகும் அனைத்து தகவல்களும் பொய்யான செய்திகள். சுந்தர் சி மற்றும் அவ்னி சினி மேக்ஸ் அதிகார பூர்வமாக அறிவிக்கும் போதுதான் அரண்மனை 5 படம் உருவாகும். அதனால் இப்போது வெளியாகி வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். கேங்கர்ஸ் படத்தில்தான் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். விரைவில் அந்த படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார். அதனால் இதுவரை அரண்மனை 5 குறித்து சோசியல் மீடியாவில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று குஷ்பு தெரிவித்திருப்பது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்