- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளிக்கு சூர்யாவின் கருப்பு ரிலீஸ் இல்லையா... நேரடியா விஜய் கூட மோத போகிறாரா... அப்படினா தரமான...

தீபாவளிக்கு சூர்யாவின் கருப்பு ரிலீஸ் இல்லையா… நேரடியா விஜய் கூட மோத போகிறாரா… அப்படினா தரமான சம்பவம் காத்து இருக்குன்னு சொல்லுங்க…

- Advertisement -

சூர்யாவுக்கு கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியானது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இதனை இயக்கியிருந்தார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். காதல் கலந்த ஆக்சன் ஃபிலிம் ஆக எடுக்கப்பட்ட இது கலவையான விமர்சனத்தை பெற்றது.

இருப்பினும், பலருக்கும் இந்த திரைப்படம் பிடித்திருந்ததால் திரையரங்குகளில் சென்று பார்த்தார்கள். ஆனால் ஒரு தரப்பினர் இந்த திரைப்படத்தை இணையத்தில் பயங்கரமாக கிண்டல் செய்தனர். ஆனால் ரெட்ரோ, மோசமான திரைப்படம் இல்லை என்றும், அதற்கு ஏன் இப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.

கங்குவா திரைப்படத்திற்கும் இதேபோன்று சிலர் செய்ததால், இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளானது. இதன் நடுவே தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. தற்போது அவர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. திரிஷா கதாநாயகியாக வருகிறார்.

சுவாசிகா, யோகி பாபு, நட்டி, மலையாள நடிகர் இந்திரன் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்று இருக்கிறார்கள். சாய் அபயங்கர் இதில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து டீசர் வெளியானது. ஆன்மீகம் கலந்த ஆக்சன் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருப்பது அதன் டீசரிலேயே விளங்கியது.

இதில் வழக்கறிஞராக வருகிறார் சூர்யா. அதேசமயம் கருப்பு சாமியின் கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. காந்தாரா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போன்று இதிலும் வெயிட்டான சம்பவங்கள் இருப்பதாக பேசி கொள்கிறார்கள். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றே கூறப்பட்டு வந்தது.

படத்தின் தயாரிப்பாளரும் நிச்சயமாக இதனை ஒரு பண்டிகை நாளில்தான் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்படியான சூழலில் கருப்பு திரைப்படம் பொங்கலுக்கு தள்ளி போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படத்தையும் அதே பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது சூர்யா படமும் களத்தில் இறங்கி இருப்பதால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்