- Advertisement -
Homeபொழுதுபோக்கு"அது மட்டும் வேண்டாங்க ப்ளீஸ்"... விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திடீரென கோரிக்கை வைத்த சூர்யா... என்ன...

“அது மட்டும் வேண்டாங்க ப்ளீஸ்”… விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திடீரென கோரிக்கை வைத்த சூர்யா… என்ன காரணமா இருக்கும்?…

- Advertisement -

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. வசந்த் இயக்கத்தில், விஜய், சூர்யா ஆகிய இருவரும் நடித்திருந்த இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதில் சூர்யா நடிகர் சிவகுமாரின் மகனாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து காதலே நிம்மதி, பெரியண்ணா படங்களில் நடித்த சூர்யாவுக்கு கொஞ்சம் பேர் வாங்கி கொடுத்த திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். தமிழ் சினிமாவில் அப்போது அறிமுகமானவரும், தனது வருங்கால மனைவியுடனும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார் சூர்யா.

தொடர்ந்து திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தி வந்தாலும், சூர்யாவின் முன்னிலைப் படுத்தியும் அவரின் முழு திறமையையும் வெளிப்படுத்தும் வகையிலும் எந்த ஒரு படமும் அமையவே இல்லை. அந்த சமயத்தில் இயக்குனர் பாலா உடன் அவர் கைகோர்த்து திரைப்படம்தான் நந்தா. தமிழ் சினிமா இதுவரை பார்க்காத புதிய களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற பலரும் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளினர். இதைத்தொடர்ந்து அவர் நடித்த உன்னை நினைத்து மற்றும் மௌன பேசியதே ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூர்யாவை முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைக்க செய்தது.

இதன் பிறகு கதை தேர்வில் மிக கவனமாக இருந்த சூர்யா,தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்தும், அதில் வெற்றி கண்டும் புகழின் உச்சிக்குச் சென்றார். 2003 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த காக்க காக்க திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அன்புச்செல்வன் என்னும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து சபாஷ் போட வைத்தார் சூர்யா. கலாபக் காதலனாகவும் பெண்கள் மனதை கொள்ளை கொண்டார். பிறகு பாலாவுடன் மீண்டும் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படமும், சூர்யாவின் நடிப்புக்கு இன்னொரு பாலமாய் அமைந்தது.

படத்தில் விக்ரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், நகைச்சுவையில் கலக்கிய சூர்யாவை தூக்கி வைத்துக் கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள். பின்னர் பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, வேல், ஜில்லுனு ஒரு காதல், ஆறு திரைப்படங்கள் என சூர்யாவின் திரைப்பட பயணம் டாப் கியரில் சென்றது. இதனிடையே தனது காதலி ஜோதிகாவையும் பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்தார் சூர்யா.

கௌதம் வாசுதேவனுடன் அவர் மீண்டும் இணைந்து நடித்த வாரணம் ஆயிரம், கேவி ஆனந்துடன் அயன் போன்ற திரைப்படங்களும் வெற்றி பெற்றன. தொடர்ந்து சிங்கம் சீரிஸில் நடித்து கமர்சியலுக்கான கதாநாயகன் என பெயர் எடுத்த சூர்யாவுக்கு, மாற்றான், அஞ்சான், மாஸ் என்கிற மாசிலாமணி, தானா சேர்ந்த கூட்டம், என் ஜி கே போன்ற திரைப்படங்கள் சரிவை கொடுத்தன. இதன் பின்னர் சூரரை போற்று திரைப்படத்தால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிய சூர்யா, ஜெய் பீம் படம் மூலம் பலராலும் பாராட்டப்பட்டார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் அவர் நடித்து வருகிறார். தொடர்ந்து வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா உடன் அவர் இணையும் நிலையில், தனது மகன் தேவ்வுடன் அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க தொடங்கியதும், தனது மகனை மட்டும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். நடிகரின் கோரிக்கையை ஏற்று சூர்யாவை மட்டும் செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. சூர்யா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விரைவில் மும்பையில் வீடு வாங்கி தங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்