- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா... அமவுண்டை கேட்டு...

ஏதே… ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா… அமவுண்டை கேட்டு ஆடிப்போன சூர்யா ரசிகர்கள்…

- Advertisement -

சூர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் அந்த அளவு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வசூலிலும் சற்று பின்தங்கியே இருந்தது. இதனால் கடும் கோபமான சூர்யாவின் மனைவி ஜோதிகா, தனது கணவரின் திரைப்படங்களுக்கு மட்டும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் அவர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய ரெட்ரோ திரைப்படம் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

ஜோஜூ ஜார்ஜுக்கு வளர்ப்பு மகனாக இருக்கிறார் சூர்யா. கேங்ஸ்டர் ஆக இருக்கும் ஜார்ஜ்க்கு வலது கையாக மாறும் சூர்யா, பூஜா ஹெக்டேவின் மீது கொண்ட காதலால் தனது அடிதடியை விட முடிவு செய்கிறார். ஆனால் திருமணத்தின் போது, தங்க மீன் என்ற ஒரு விவகாரத்தினால் தந்தைக்கு மகனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது.

திருமணமும் நின்று போக ஜெயிலுக்கு செல்கிறார் சூர்யா. பிறகு தனது காதலியை தேடி அந்தமானுக்கு செல்ல, அங்கு ஒரு தரப்பு மக்கள் சிரிப்பையை மறந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த மக்களை நாசர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அந்தமானில் உள்ள அந்த மக்களுக்கும் சூர்யாக்கும் என்ன சம்பந்தம், தனது காதலியை கரம் பிடித்தாரா சூர்யா

தங்க மீன் என்றால் என்ன இதற்கான விடைகளுக்கு தான் கார்த்திக் சுப்புராஜ் தனக்கே உண்டான திரைக்கதையின் மூலம் பதில் அளித்து இருந்தார். இந்த திரைப்படம் சிலருக்கு வொர்க் அவுட் ஆன நிலையில், பலரும் சரியில்லை என்றே கூறினர். ஆனால் இது எதுவும் வசூலை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்ரோ திரைப்படம் 104 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, அந்தப் படம் திரையரங்குகள் மற்றும் பிற வருவாய் மூலம் 235 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவையான விமர்சனத்தை சந்தித்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறதா என்று சூர்யா ரசிகர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சற்று முன்