- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் ரெட்ரோ பட ரிலீஸ் தேதியை லாக் பண்ணியாச்சு... திட்டமிட்டு காய் நகர்த்திய கார்த்திக் சுப்பராஜ்......

சூர்யாவின் ரெட்ரோ பட ரிலீஸ் தேதியை லாக் பண்ணியாச்சு… திட்டமிட்டு காய் நகர்த்திய கார்த்திக் சுப்பராஜ்… போடு டண்டனக்கா…

- Advertisement -

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு பியூர் கேங்ஸ்டர் படத்தை தன்னால் எந்த அளவுக்கு சுவாரசியமாக கொடுக்க முடியுமோ அதனை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார்.

 

- Advertisement -

ஜிகர்தண்டா திரைப்படம் வெற்றி பெற்றதற்கு கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் ஒரு காரணம் என்றால், பாபி சிம்ஹாவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணனின் இசையும் மற்றொரு காரணம். குறிப்பாக அசால்ட் செய்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திய பாபி சிம்ஹா, அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில் அவர் ஜிகர்தண்டா திரைப்படத்தின் prequal ஆக எடுத்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் போட்டி போட்டு அந்த திரைப்படத்தில் நடித்திருக்க, படம் அனைவரது மத்தியிலும் ரீச் ஆனது. இப்படியான சூழலில் தான் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.

 

ரெட்ரோ என இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் சந்தோஷ் நாராயணன் தான் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கருணாகரன் ஜெயராம் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். அந்தமானில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

 

அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதில் தனது காதலியான பூஜாவிடம், சூர்யா பேசும் வசனங்கள் பலருக்கும் பிடித்துப் போனது. அடிதடியை விட்டு விடுகிறேன் என அவர் தனது காதலிக்காக மாறுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் இசை நன்றாக இருப்பதாக பலரும் கூறினர்.

 

ரெட்ரோ திரைப்படம் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரலில் வெளியாகும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெட்ரோ ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். இப்படியான சமயத்தில்தான் ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை குறிவைத்து படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்