- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 2026ம் ஆண்டில் நடிகர் விஜயுடன் மோத தயாரான 2 ஹீரோக்கள் - அதில் மன்னன்...

வருகிற 2026ம் ஆண்டில் நடிகர் விஜயுடன் மோத தயாரான 2 ஹீரோக்கள் – அதில் மன்னன் நான்தான் என்பதை மீண்டும் தளபதி நிரூபித்து காட்டுவாரா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிரியாமணி மமிதா பைஜூ பாபி தியோல் பிரகாஷ் ராஜ் நரேன் கௌதம் மேனன் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்தை எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்துக்கு எச் வினோத் இசையமைத்துள்ளார். பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீ மேக் ஜனநாயகன் என்றும் சொல்லப்படுகிறது. இதில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியலில் இப்போது ஈடுபட்டு வருகிறார். எனினும் வருகிற டிசம்பர் மாதம் மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் பேசும் விஷங்கள், படத்தின் பிரமோவாக பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு முக்கிய தகவலும் இப்போது வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிகர் ரவி மோகன் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். ஸ்ரீீலீலா நாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

ஜனநாயகன், பராசக்தி படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவலாக வரும் 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் சூர்யா நடித்த படமும் வெளியாகிறது. இப்போது இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் இல்லாததால், அதில் குழப்பம் நிலவுகிறது.

அதே நேரத்தில் கருப்பு படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வது என்ற திட்டமிடலுடன்தான் படப்பிடிப்பையே துவங்க உள்ளனர். ஏனெனில் இது குறுகிய கால படமாக 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் விஜயுடன் சிவகார்த்திகேயன், சூர்யா படங்களும் மோதுகின்றன. இதில் எப்போதுமே வசூல் மன்னன் நான்தான் என்பதை தளபதி மீண்டும் நிரூபிப்பார் என தளபதி ரசிகர்களும் தவெக தொண்டர்களும் உறுதியாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்