- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரியின் வேண்டுகோளை நிராகரித்த தயாரிப்பாளர்கள், நடந்த உண்மையை சொன்ன பிரபல இயக்குனர் - அதை...

நடிகர் சூரியின் வேண்டுகோளை நிராகரித்த தயாரிப்பாளர்கள், நடந்த உண்மையை சொன்ன பிரபல இயக்குனர் – அதை இன்னும் சூரி மறக்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சூரி. இப்போது நாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் சூரி. அந்த படம்தான் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அதுதான் அவரது சினிமா வெற்றிக்கு முதல் படிக்கட்டாகவும் அமைந்தது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் சுசீந்தரன். வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல அழகர் சாமியின் குதிரை பாண்டியநாடு பாயும் புலி மாவீரன் கிட்டு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் கடைசியாக இயக்கிய கென்னடி கிளப் சாம்பியன் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விடுதலை படத்தில் நாயகனாக நடித்தார். பிறகு விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் சூரி இப்போது மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக கட்டாகுஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு சினிமாவில் காமெடி நடிப்பில் முக்கியத்துவம் கொடுத்து, சினிமா பயணத்துக்கு முதல் அடியாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சுசீந்தரனுக்கு நன்றிக்கடன் செய்ய நடிகர் சூரி விரும்பியுள்ளார். தொடர்ந்து சில தோல்வி படங்களை தந்த நிலையில் சுசீந்தரன் இயக்கத்தில் நடிக்க நடிகர் சூரி தாமாக முன்வந்துள்ளார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பங்கேற்ற இயக்குனர் சுசீந்தரன் வெளிப்படையாக சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் இதுபற்றி கூறுகையில், சூரியே என் கூட படம் பண்ணணும் என்று ஆசைப்பட்டு, எனக்கு டேட் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சொன்னாலும், வேணாம் சார் வேற யாராவது நல்ல டைரக்டர்ஸ் பார்ப்போமுன்னு சூரிகிட்ட சொல்லிடறாங்க.

இந்த விஷயத்தை நடிகர் சூரியே எங்கிட்ட ஒருமுறை பேசும்போது தயங்கி தயங்கி சொன்னார். அப்போ நான் சூரியிடம் பரவாயில்லடா, நானே சொல்றேன். ஒரு ஹிட் படம் கொடுத்துட்டு வர்றேன். அப்புறமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறேன் என்று அந்த நேர்காணலில் சுசீந்தரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்