- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதிக்கு வில்லியாகும் பாலிவுட் நடிகை... போடு இந்த காம்போ வேற லெவலில் இருக்குமே...

விஜய் சேதுபதிக்கு வில்லியாகும் பாலிவுட் நடிகை… போடு இந்த காம்போ வேற லெவலில் இருக்குமே…

- Advertisement -

கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படத்தின் வெற்றி மூலம் விஜய் சேதுபதியின் மார்க்கெட் மீண்டும் எகிறி விட்டது. அவரது திரைப்படங்களின் மீது மீண்டும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்படியான சூழலில் தான் அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் என்னும் திரைப்படம் வெளியானது. ருக்மணி வசந்த் யோகி பாபு உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.

ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்னும் படத்தை எடுத்த ஆறுமுக குமார் இதனை இயக்கி இருந்தார். மலேசியா நாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. நகைச்சுவை ஓரளவு ஈடுபட்டாலும், படத்திற்கு பெரிய மார்க்கெட் இல்லாததால் தோல்வி அடைந்தது ஏஸ் திரைப்படம்.

- Advertisement -

இப்படியான சூழலில் விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக தலைவன் தலைவி திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. குடும்பக் கதை களத்தை எடுத்து அதில் வெற்றி காணும் பாண்டிராஜ் இதனை இயக்கி இருக்கிறார். படத்தின் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்துள்ளார். கதாநாயகி மற்றும் கதாநாயகன் ஆகிய இருவரை மையப்படுத்தி இந்த திரைப்படம் நகரும் என்பதாலேயே இதற்கு தலைவன் தலைவி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஆகாச வீரன் என்னும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். சின்னத்திரை நடிகை ரோஷினி இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு சகோதரியாக நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வரும் 25ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதில் சில சிக்கல்கள் வந்தால், படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் படத்தில் கைகோர்த்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. சம்யுக்தா மேனன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை தபு இதில் இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அதிலிருந்து ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தில் அவருக்கு வில்லி கதாபாத்திரமாம். விஜய் சேதுபதிக்கு எதிரான ரோலில் அவர் மிரட்டுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்