- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம் ஆர் ராதா மகனா இருந்தாலும் ஆரம்பத்துல யாரும் கண்டுக்கலே, என்னை கை தூக்கி விட்டதே...

எம் ஆர் ராதா மகனா இருந்தாலும் ஆரம்பத்துல யாரும் கண்டுக்கலே, என்னை கை தூக்கி விட்டதே அவர்தான் – நடிகர் ராதாரவி உருக்கம்!

- Advertisement -

வாரிசு அரசியல் போல வாரிசு சினிமா என்பதும் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறது. இயக்குனர்கள், நடிகர்களின் மகன்கள் மகள்கள் சுலபமாவில் சினிமாவில் நடிகர், நடிகைகளாகி விடுகின்றனர். ஆனால் இதில் 10 பேரில் ஒருவர்தான் தொடர்ந்து ஜெயித்து சினிமாவில் நிலைத்து நீடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வாரிசுகளாக வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் நடிகர்கள் பிரபு கார்த்திக் சூர்யா கார்த்தி விஜய் தனுஷ் என குறிப்பிட்டு சில பேரை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் தந்தை பிரபல நடிகராகவோ இயக்குனராகவோ இருந்தாலும் சொந்த சரக்கு இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பது எழுதப்படாத விதி.

- Advertisement -

பிரபு மகன் விக்ரம் பிரபு கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் சத்யராஜ் மகன் சிபிராஜ் முரளி மகன் அதர்வா என களம் இறங்கிய வாரிசுகளால் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக ஜெயிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சினிமா பின்புலமே இல்லாமல் வந்த சிவகார்த்திகேயன் சூரி பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் தொடர்ந்து ஜெயித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை திரைப்படங்களின் காலமான 1960 70களில் கொண்டாடப்பட்டவர் நடிகர் எம்ஆர் ராதா. நடிகவேள் என்று அழைக்கப்பட்ட அவர் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர். எனினும் சினிமாவில் நல்ல கலைஞராக போற்றப்பட்டவர். அவரது கலை வாரிசுகளில் ஒருவர்தான் அவரது மகன் ராதாரவி. இப்போதும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து பிறகு வில்லன் கேரக்டர்களில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் ராதாரவி. ஒரு கட்டத்திற்கு பிறகு அண்ணன் அப்பா போலீஸ் அதிகாரி அரசியல்வாதி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தன் முத்திரை பதிக்கும் நடிப்புக்கு சொந்தக்காரர் ராதாரவி என்றால் மிகையல்ல.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது, நான் நடிகவேள் எம்ஆர் ராதா மகனாக இருந்தும், ஆரம்பத்தில் சினிமாவில் எனக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. நடிக்க வரவேற்பும் இல்லை. சின்ன சின்ன கேரக்டர்கள்தான் கிடைத்தது. ஆனால் இயக்குனர் டி ராஜேந்தர்தான் என்னை அவரது படங்களில் வில்லனாக நடிக்க வைத்து, பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்தார். என்னை ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் நம்பி அவரது படத்தில் நடிக்க வாய்ப்பளித்து கை தூக்கி விட்டவர் டி ராஜேந்தர்தான். அவரது படங்கள்தான் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்