- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்வளவு கவர்ச்சிக்கு என்ன காரணம்.. செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான தமன்னா... என்ன சொன்னார் பாருங்க

இவ்வளவு கவர்ச்சிக்கு என்ன காரணம்.. செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான தமன்னா… என்ன சொன்னார் பாருங்க

- Advertisement -

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அந்தப் படத்துக்கு பிறகு கல்லூரி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கல்லூரி படத்தில் தமன்னாவின் பக்குவமான நடிப்பும், அழகும் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனையடுத்து அவருக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அதன்படி தமிழில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். அதேபோல் தெலுங்கிலும் சொல்லிக்கொள்ளும்படியான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவர் திடீரென தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துக்கொண்டு பாலிவுட் பக்கம் சென்றார்.

- Advertisement -

அங்கும் பல படங்களில் நடிக்கும் அவர் கடைசியாக லஸ்ட் ஸ்டோரில் 2வில் நடித்தார். அப்போது அதில் நடித்த விஜய் வர்மாவுடன் காதலிலும் விழுந்து அதை உறுதியும் செய்தார். பாலிவுட் பக்கம் சென்றதிலிருந்து தமன்னாவின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என்பது ரசிகர்களின் பொதுவான கருத்து. இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. குறிப்பாக அந்தப் பாடலின் ட்யூன் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதைவிட அதிகம் தமன்னாவின் நடனம் கவர்ந்தது. ஒருபக்கம் பலரும் அவரது நடனத்தை பாராட்டினாலும் மற்றொரு பக்கம் இந்தப் பாடலின் நடன அசைவுகள் ரொம்பவே ஆபாசமாக இருக்கின்றன. தமன்னா ஓவர் கவர்ச்சி காட்டுகிறார் என்ற விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் தமன்னா. விழாவில் பேசிய அவர் கார்த்தியால்தான் நான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்று பேசிவிட்டு அவருடன் சேர்ந்து குட்டியாக நடனமும் ஆடினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் தமன்னா.

அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் நீங்கள் ஏன் நிறைய தமிழ் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக பாகுபலியில் நடித்தீர்கள். அதன் பிறகு உங்களை தமிழ் பக்கம் பார்க்க முடியவில்லையே என்றார். அதற்கு பதிலளித்த தமன்னா, என்னது தமிழில் நடிக்கவில்லையா. நீங்கள் போய் கூகுள் செய்து பாருங்கள் என்றார். அதனையடுத்து ஒரு செய்தியாளர் நீங்கள் ஏன் பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வருகிறீர்கள் என்று கேட்டதற்கு கடுப்பான தமன்னா, இதெல்லாம் தேவையில்லாத கேள்வி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

- Advertisement -

சற்று முன்