- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி தந்த தவெக அரசு, தியேட்டர்கள் பக்கமே எட்டிப் பார்க்காத...

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி தந்த தவெக அரசு, தியேட்டர்கள் பக்கமே எட்டிப் பார்க்காத ரசிகர்கள் – இந்த அவமானம் தேவையா கோபால்?

- Advertisement -

முந்தைய திமுக அரசு புதிய படம் ரிலீஸாகும் போது ஒரு சிறப்பு காட்சியுடன் முதல் நாளில் 5 காட்சிகள் திரையிட தியேட்டர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, புதிய படம் ரிலீஸ் ஆன முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் என அனுமதித்தது. அதன்பிறகு தற்போது காலை 6 மணி முதல் இரவு 2.30 மணி வரை தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி தந்தது. ஆனால் காலை 6 மணி காட்சி காண எந்த தியேட்டர்களிலும் கூட்டம் வரவில்லை. சென்னை செங்கல்பட்டு தவிர தமிழ்நாட்டில் தீபாவளி அன்று கூட 6 மணி காட்சியின்றி 9 மணி காட்சிதான் திரையிடப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு படம் பார்க்க தியேட்டர்களுக்கு திரண்டு வரும் அளவுக்கு மக்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதை கூட யோசிக்க மாட்டாங்களா? இந்த அவமானம் தேவையா கோபால்? என்று தவெக அரசை நெட்டிசன்கள் கலாய்த்து விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்