- Advertisement -
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீதான பார்வை தவறான கண்ணோட்டத்தில் சிலரால் அணுகப்படுகிறது என்று நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது. இந்த கண்ணோட்டம் கடுமையாக கண்டிக்கதக்கது. இதில் உண்மை இருந்தால் உடனே யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் விஜய் இத்தகைய தங்களது கட்சியினர் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். மீறினால் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





